IMG 20230207 WA0037 - 2026

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகளவில் பனிப்பொழிவு..

தமிழகம்
IMG 20230207 WA0037 - 2026

மயிலாடுதுறை தஞ்சாவூர் நாகப்பட்டினம் பகுதியில் பகுதிகளில் இன்று காலை கடுமையான பனிப்பொழிவால் வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டுபடியே வாகனங்கள் செல்லும் நிலை ஏற்பட்டது.பனிப்பொழிவால் நெல் அறுவடை மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.சென்னையை சுற்றிய பகுதிகளிலும் பனிப்பொழிவு மிக அதிகமாக இருந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் நாகப்பட்டினம் தஞ்சாவூர் திருவாரூர் பகுதியில் கடந்த வாரத்தில் கனமழை பெய்தத நிலையில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு காலை 8மணி வரை இருக்கிறது.

தற்பொழுது சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் சட்டநாதபுரம் திருமுல்லைவாசல் கொள்ளிடம் பூம்புகார் திருவெண்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முதலே அதிகமான குளிர் நிலவிவந்த நிலையில் பனிப்பொழிவு அதிகளவில் காணப்படுகிறது. குறைந்த தூரத்தில் இருக்கின்ற பொருள் கூட தெரியாத அளவிற்கு பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கு எரிய விட்டுபடியே குறைவான வேகத்தில் வாகனங்களை இயக்கி செல்கின்றனர்.

மேலும் நடைபயிற்சி மேற்கொள்ளோர் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைவீதிக்கு செல்லோரின் எண்ணிக்கையும் குறைவாகவே காணப்பட்டது.

மேலும் இளம் சம்பா சாகுபடி பயிர்களில் மழை,பனி மாறி மாறி பெய்வதால் புகையான் தாக்கம் அதிகரிக்கும் எனவும் கடந்த வாரத்தில் பெய்த கனமழையில் நனைந்த சம்பா நெற்பயிர்கள் காயாத நிலையில் பனி மழை போல் பெய்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.