கடலூரில் குடும்ப பிரச்சினை -மூவர் எரித்துக்கொலை: தீ வைத்தவரும் பலி..

images 2023 02 08T140330.554 - 2026

குடும்ப பிரச்சினை காரணமாக இன்று கடலூரில் பைக்கில் இருந்த பெட்ரோலை வீட்டு கூரை மீது ஊற்றி தீவைத்ததில் இரு குழந்தை உள்பட மூவர் எரித்துக்கொலை செய்யப்பட்டனர்.தீ வைத்தவரும் தீ பற்றி எரிந்து உடல் கருகி பலியானார்.காயமடைந்த மூவரை சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்த்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் செல்லங்குப்பம் வெள்ளிப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (35). இவரது மனைவி தமிழரசி (31). இவர்களுக்கு ஹாசினி (1) என்ற குழந்தையும், 4 மாத பெண் குழந்தை உள்ளது. தமிழரசியின் தங்கை தனலட்சுமி, அவரது கணவர் சத்குரு. இவர்களுக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது. இதில் சத்குரு, தனலட்சுமி ஆகியோர் கடலூர் தேவனாம்பட்டினத்தில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக சத்குருவிற்கும் தனலட்சுமிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு தனலட்சுமி அண்ணன் பிரகாஷின் வீட்டிற்கு வந்தார். அங்கு பிரகாஷின் அம்மா செல்வியுடன் வீட்டில் தங்கினார். இதன் பின்னர் இன்று காலை பிரகாஷ் வழக்கம்போல் வேலைக்கு சென்றார்.அப்போது வீட்டில் இருந்த தனலட்சுமியிடம் சத்குரு போனில் தொடர் கொண்டார். பின்னர் சத்குருவுக்கும் தனலட்சுமிக்கும் இடையே உள்ள பிரச்சனை காரணமாக சத்குரு நேரடியாக பிரகாஷின் வீட்டிற்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில் சிறிது நேரத்தில் பிரச்சனை பெரிதாக உருவானது. உடனே சத்குரு தான் வந்த மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோல் எடுத்து வீட்டில் இருந்தவர்கள் மீது ஊற்றிவிட்டு வீட்டை பூட்டி கொண்டு தீ வைத்தார். பின்னர் தன் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் அந்த இடம் முழுவதும் தீயினால் புகை மண்டலமாக காணப்பட்டது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து கடலூர் முதுநகர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து போலீசார் ஆபத்தான நிலையில் இருந்தவர்களை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் சேர்த்தனர். இந்த தீ விபத்தில் தமிழரசி, குழந்தை ஹாசினி மற்றும் ஆறு மாத ஆண் குழந்தை, சத்குரு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் தீ விபத்தில் படுகாயம் அடைந்த தனலட்சுமி, தனலட்சுமியின் அம்மா செல்வி ஆகியோரை ஆபத்தான நிலையில் போலீசார் மீட்டு சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories