பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவனை உச்சி வெயிலில் முட்டி போட வைத்த சம்பவம்..

images 12 1 - 2026

பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவனை உச்சி வெயிலில் முட்டி போட வைத்த ஆசிரியர் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில் மாணவர்களை அதற்காக தயார்படுத்தும் முயற்சியில் கடுமையாக ஆசிரியர்கள் தண்டிப்பதால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். பிரம்பால் அடிப்பது கூட குற்றம் என்று வாதிடப்படும் இந்த காலகட்டத்தில் வெயிலில் முட்டி போட வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்புவரை சுமார் 1600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு காலையில் நடந்தது.

இதனால் மற்ற வகுப்பு மாணவர்கள் மதியம் பள்ளிக்கு வர அறிவுறுத்தியிருந்தனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தி சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் செந்துறை மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் அனைவரையும் செந்துறை அரசு தொடக்கப்பள்ளிக்கு வருமாறு ரகுநாத், முனிசாமி, ராஜேந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

ஆனால் 10-ம் வகுப்பு மாணவர்களில் ஒருவர் வகுப்புகளுக்கு சரிவர வராமலும், பள்ளிக்கு காலதாமதமாக வந்ததாகவும் தெரிகிறது. இதனால் ஆசிரியர் ரகுநாத் அந்த மாணவரை அழைத்து திட்டியுள்ளார். மேலும் பள்ளியில் மதியம் உச்சி வெயிலில் மைதானத்தில் முட்டி போட்டுக்கொண்டே படிக்க வைத்துள்ளார். இதனால் அந்த மாணவன் சூடுதாங்க முடியாமல் கண்ணீர்விட்டு அலறித் துடித்தான்.

இதை அங்குள்ள சிலர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இது வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில் மாணவர்களை அதற்காக தயார்படுத்தும் முயற்சியில் கடுமையாக ஆசிரியர்கள் தண்டிப்பதால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

பிரம்பால் அடிப்பது கூட குற்றம் என்று வாதிடப்படும் இந்த காலகட்டத்தில் வெயிலில் முட்டி போட வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories