மக்களே வெயில் மதியம் 12 -3 மணி வரை வெளியே போகாதீங்க..

images 20 1 - 2026

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெய்யிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.வெப்ப அலையை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது. ஈரோடு, சேலம், நாமக்கல்லில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு அதிகமாக வெப்பம் பதிவானது.

இதே போல் வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய வெப்ப அலையை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

images 19 1 - 2026

சூழலியல் மாற்றத்திற்கு ஏற்ப மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட அளவில் செயல்திட்டம் வகுக்குமாறு சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்பநிலையை எதிர்கொள்ள நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது.வெயில் அதிகமாக இருக்கும் பிற்பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்வதை குறைத்துக்கொள்ள வேண்டும். மதியம் 12 -3 மணி வரை மக்கள் அதிகமாக வெளியே செல்லாமல் வீட்டில் இருக்க வேண்டும்.உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுப்பொருட்களை குறைத்துக்கொண்டு சூட்டை தணிக்கும் பழங்கள் உள்ளிட்ட பொருட்களை உட்கொள்ள வேண்டும்.

வெயிலில் செல்ல வேண்டி இருந்தால் குடை, முழுதாக உடலை மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும். பருத்தி ஆடைகளை பயன்படுத்த வேண்டும் .

தோலில் எரிச்சல், அதிக சூடு, சூடு கட்டிகள், வாந்தி, மயக்கம் ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.குழந்தைகள், வயதானோர், பெண்கள் வெப்ப அலையால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இதனால் அவர்கள் முடிந்த அளவிற்கு வீட்டிலேயே இருக்க வேண்டும்.

வெப்பத்தால் பாதிப்பு ஏற்படும் நபர்களை கண்காணித்து கணக்கிடவும் குறிப்பாக அதீத வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தினசரி பதிவேற்றம் செய்யவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்படுகிறது.

தமிழ்நாடு மின்வாரியத்துடன் இணைந்து வெயில் காலத்தில் மருத்துவமனைகளுக்கு தடையற்ற மின்சேவை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories