சென்னை: கடந்த இரு நாட்களில் அரசியல் நிகழ்வுகள் அல்லாது சமூகம் சார்ந்த இரு நிகழ்வுகள் பெரிதும் பேசப்பட்டன. சமூக வலைத்தளங்களில் ஆதிக்கம் செலுத்திய இரு பெண்கள் குறித்த செய்திதான் அது!
லேடீ போலீஸ் கான்ஸ்டபிள், சூப்பர் மார்க்கெட் ஒன்றில் போன் பேசியபடியே, கையில் கிடைத்ததை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டு, ஒன்றும் தெரியாதது போல் ஒதுங்கினார். ஆனால் கேமரா காட்டிக் கொடுக்க, வேறு வழியின்றி அதைப் போட்டுவிட்டு இனி இப்படி பொருள்களை திருட மாட்டேன் என மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார்.
இன்னொரு சம்பவமாக சிவகாசியில் நடந்த நிகழ்வு… ஜவுளிக் கடையில் துணி வாங்கியபோது, அதைப் போட்டுக் கொடுக்கும் பைக்குப் பதிலாக, எட்டரை லட்சம் ரூபாய் பணம் இருந்த பையை கவனக் குறைவாகக் கொடுத்துவிட்டார் கடை முதலாளி. அதை தனது வீட்டுக்குச் சென்ற பிறகு எடுத்துப் பார்த்துள்ளார் சிவகாசி சாச்சிபுரத்தைச் சேர்ந்த சிவசங்கரி எனும் பெண்மணி. உடனே கடைக்கு வந்து கடை முதலாளியிடம் எட்டரை லட்ச ரூபாய் பணத்தை அப்படியே திருப்பிக் கொடுத்தார்,.
இப்போது இந்த இரு படங்களும் செய்திகளும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாகப் பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. திருட்டைத் தடுக்க வேண்டிய போலீஸ்காரம்மா நேர்மையை இழந்து திருடுவதும், பொதுசனமோ நேர்மையாக இருந்து பணத்தை உரியவரிடம் கொடுப்பதும்.. என இந்த புகைப்படங்கள் சேதி சொல்கின்றன…
ஜவுளிக் கடையில் துணி வாங்கியபோது, அதைப் போட்டுக்கொடுக்கும் பைக்குப் பதிலாக, எட்டரை லட்சம் ரூபாய் பணம் இருந்த பையை கவனக்குறைவாகக் கொடுத்துவிட்ட கடை முதலாளியிடம் வீட்டுக்கு சென்றபிறகு பார்த்து பணத்தை திருப்பிக்கொடுத்த
விருதுநகர் மாவட்டம், சிவகாசி சாச்சிபுரத்தைச் சேர்ந்த சிவசங்கரி? pic.twitter.com/t5NymisgW2— சிந்தனைவாதி? (@PARITHITAMIL) July 26, 2018






உணà¯à®®à¯ˆ தானà¯.விரà¯à®¤à¯à®¨à®•ர௠பெணà¯à®®à®£à®¿ மனசாடà¯à®šà®¿ à®®à¯à®©à¯ நடநà¯à®¤à¯ கொணà¯à®Ÿà®¾à®°à¯.
மனசாடà¯à®šà®¿ யà¯à®Ÿà®©à¯
நேரà¯à®®à¯ˆà®•à¯à®•௠தலை வணஙà¯à®•à¯à®µà¯‹à®®à¯ வாழà¯à®• வளமà¯à®Ÿà®©à¯