சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி இன்று தனது ரெட்மி 8ஏ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் ஆனது 6.2-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெட்மி 8ஏ சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் வசதியாக இருக்கும்.
ரெட்மி 8ஏ சாதனத்தில் 12எம்பி ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



