5ஜி சேவை கிராம மக்கள் முதல் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும்-மோடி..

images 2022 10 01T145315.482 - 2026
images 2022 10 01T145230.041 - 2026

5ஜி சேவை கிராம மக்கள் முதல் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் என்று அதிவேக இணைய வசதியை அளிக்கும் 5 ஜி சேவையை டெல்லியில் இன்று பிரதமர் மோடி துவக்கி வைத்து பேசினார்.

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இந்திய மொபைல் மாநாடு நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி 5ஜி தொலைத்தொடர்பு சேவையை முறைப்படி தொடங்கி வைத்தார். இதில் நாட்டின் 3 பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஆகியவை 5ஜி இணையத்தின் முன்மாதிரியை காட்சிபடுத்தி இருந்தன.

இவற்றை பார்வையிட்ட பிரதமர் மோடி 5ஜி தொடர்பான பிற தொழில்நுட்பங்களையும் ஆய்வு செய்தார். அதில் 5ஜி அடிப்படையிலான ட்ரோன்கள், இணைய பாதுகாப்பிற்கான செயற்கை நுண்ணறிவு சார்ந்த தளங்களை பிரதமர் பார்வையிட்டார்.

முதல்கட்டமாக குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை செயல்பாட்டிற்கு வரவுள்ளது. பின் 5ஜி சேவையை குறித்து பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், இந்தியாவை அடுத்த வளர்ச்சிக்கு கொண்டு செல்ல 5ஜி சேவை வழிவகுக்கும். 5ஜி சேவை கிராம மக்கள் முதல் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும். ஏழை, எளிய மக்கள் வரை இந்த 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டு செல்ல வேண்டியது நமது பொறுப்பு.

மேலும் 5ஜி தொழில்நுட்பம் தொலைத்தொடர்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும். 5ஜி அறிமுகம் 130 கோடி இந்தியர்களுக்கு தொலைத்தொடர்பு துறையின் பரிசு. புதிய இந்தியா தொழில்நுட்பத்தின் நுகர்வோராக இல்லாமல் அதனை மேம்படுத்தி செயல்படுவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

கைபேசி உற்பத்தியில் இந்தியா உலகளவில் 2வது இடம் பிடித்துள்ளது. உலகின் தொழில்நுட்ப வளர்ச்சியை இந்தியா முன்னெடுக்கும். 5ஜி தொழில்நுட்பம் இந்தியாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் 5ஜி மூலம் பல புதிய வாய்ப்புகள் இந்திய இளைஞர்களுக்கு கிடைக்கப்போகிறது. டிஜிட்டல் இந்தியா என்பது இந்திய இளைஞர்களின் வளர்ச்சிக்கான திட்டமாக பார்க்கப்படுகிறது என பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories