இதெல்லாம் தைக்க முடியாது…!

துணுக்குகள் நகைச்சுவை
tailor - 2026

ஒருவா் டைலர் கிட்ட சட்டை தைக்கத் துணி எடுத்துகிட்டுப் போனாரு. டைலர் துணியை அளந்து பாத்துட்டு துணி பத்தாதுன்னு சொல்லி திருப்பிக் கொடுத்துட்டார்.

அவரும் வேறு ஒரு டைலர் கிட்ட இதே துணியை எடுத்துகிட்டு போனாறு. டைலர் அளந்து பாத்துட்டு, இவருக்கும் அளவு எடுத்து கிட்டு 5 நாள் கழிச்சு வரச் சொன்னார்.

5 நாள் கழிச்சு இவுரு போனாரு. சட்டை ரெடி.போட்டுப் பாத்தாரு. சரியா இருந்தது.

அப்ப டைலரோட மகன் சின்னப் பையன் அங்கு வந்தான், அவனும் இவர் குடுத்த அதே துணியில் சட்டை போட்டிருந்தான்.
இவரு ஒண்ணும் பேசலை.

நேரா விறுவிறுன்னு பழைய டைலர் கிட்ட வந்தாரு. யோவ், நீ தைக்க.மாட்டேன் , துணி பத்தாதுன்னு சொன்னே இதப் பாருய்யா நான் சட்டை போட்டிருக்கேன்! அதுவில்லாம அவர் மகனுக்கும் இதே துணில சட்டை தெச்சுப் போட்டிருக்காரு. நீ டைலரே இல்லைன்னு சத்தம் போட்டாரு.

அந்த டைலர் கேட்டாரு… “சார் அந்தப் பையனுக்கு என்ன வயசிருக்கும்?”ன்னு!

“என்ன இரண்டு வயசு இருக்கும்” ன்னாரு இவரு.

உடனே டைலர் சொன்னாரு… “என் மகனுக்கு ஒம்பது வயசு.”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.