கமல் படிவம் பூர்த்தி செய்தால், இப்படித்தான் இருக்குமாம். சொல்றாங்க.
பெயர்: எம்பெயர் எதுவாக இருப்பினும் அதையே இவ்விடம் பூர்த்தி செய்ய நான் எதற்கு? மை நிரப்பிய பேனா கொண்டு மொய் எழுத வந்தவனல்ல நான், மெய் எழுத வந்த முதல்வன், என நீரே எழுதிக்கொள்ளக்கடவது. நான் யாரென்பது உமக்கு தெரியுமென்பதை யாமறிவோம்.
சொத்துவிபரம்: ஆண்டோர் மற்றும் ஆள்போரின் கணக்கறியா சிறுவனுனக்கு தெரியாதா, நான் ஈன்ற சொத்து ஸ்ருதியும், அக்க்ஷராவும், எம் தமிழ் நற்ப்பணி இயக்க சகாக்களும்தானென்று?
மதம்: நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி. நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன் செயலல்ல. பக்தர்களில் பல்வகையுண்டு. அனைவரும் என் கேளிர்.