
உலகளாவிய அளவில இந்தியாவில் மட்டும் தான் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு தட்டுப்பாடாக இல்லாத வகையில் கிடைத்து வருகிறது.மற்ற நாடுகளை விட விலை குறைவு.நாடு முழுவதும் போக்கு வரத்து கட்டமைப்பு வலுப்படுத்த பட்டு உள்ளது.பல இஸ்லாமிய நாடுகள் பசி பஞ்சம் பட்டினி உணவு தட்டுப்பாடாக உள்ளது. இந்திய வில் உணவு தட்டுப்பாடாக இல்லை.
பல நாடுகள்ல பெட்ரோல்க்கு பதிவு செய்து டோக்கன் கொடுத்து சில நாட்களாக காத்திருக்க வேண்டும். பணம் கொடுத்தாலும் பெட்ரோல் டீசல் உடனே கிடைக்காது என்றால் கற்பனை செய்து பாருங்க அதிலயும் கள்ள மார்க்கெட் வந்தால் பல லட்சக்கணக்கான பேருக்கான பிழைப்பு என்ன ஆவது.
இப்ப சமையல் எரிவாயு உடனே கிடைக்கிறது.அதில பிளாக் மார்க்கெட் பல நாட்களாக காத்திருப்பு என்ற நிலை வந்தால் என்ன ஆவது.?
புதிய வேளாண்மை சட்டம் செயல்படுத்த பட்டு இருந்தால் விவசாயி உபயோகிக்க கூடிய வர்கள் நியாயமான விலையில் காய்கறிகள் பெற்று இருக்க முடியும்.
தமிழ்நாட்டுல திமுக ஆட்சியில எந்த வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப் பட்டது.
இலங்கையில் சமையல் எரிவாயு கடும் விலை உயர்வு பல நாட்களாக காத்திருக்க வேண்டிய நிலை பாகிஸ்தானில் பெட்ரோல் டீசல் கடும் விலை உயர்வு.சமையல் எரிவாயு தட்டுப்பாடாக உள்ளது.
இறக்குமதி செய்ய அந்நிய செலாவணி இல்லை.உக்ரைன் போர் தொடர்வதால் பல நாடுகள்ல எரிபொருள் தட்டுப்பாடாக உள்ளது.மோடிஜியின் ஆளுமை வலிமை காரணமாக கச்சா எண்ணெய் நியாயமான விலையில் டாலர் அல்லாத வகையில் இந்திய பணமாக கொடுத்து வாங்க பல எண்ணை உற்பத்தி நாடுகள்ல ஏற்பாடு செய்து உள்ளாங்க.
எனவே தக்காளி போல பயங்கர விலை உயர்வு பணம் கொடுத்தாலும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு உடனே கிடைக்காது டோக்கன் வாங்கி காத்து இருக்க வேண்டும் கள்ள சந்தையில் எம.ஆர்.பி யை விட அதிகமாக செலவு செய்து வாங்க வேண்டும் என்ற நிலை இருந்தால் என்ன ஆகும் என நினைத்து பார்க்க வேண்டும்.
மத்தியில் பதினேழு கட்சி கூட்டணியாக ஆட்சியில வந்து பசையுள்ள இலாக்கா பெற போட்டி வந்தால் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு கிடைப்பதே அரிது என்ற நிலை வரும். அவங்க அவங்க இஷ்டத்துக்கு பூந்து விளையாடுவாங்க
கச்சா எண்ணை வாங்க உலக வங்கியில் கடன் கச்சா எண்ணை கொள்முதல் கடன் வட்டி என்றபழய நிலை வரும் எனவே தட்டுப்பாடாக இல்லாத வகையில நியாயமான விலையில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு கிடைத்தால் தான் லட்சக்கணக்கான பேருக்கான அன்றாட வாழ்க்கை நடக்கும்.
எனவே சமையல் எரிவாயு பெட்ரோல் டீசல் இலங்கை பாகிஸ்தான் மற்ற பல நாடுகள்ல உள்ள நிலவரத்தை அங்குள்ள தமிழர்களிடம் பேட்டி கண்டு புதிதாக துவக்க பட உள்ள ஜனம் தமிழ் தொலைகாட்சி சேனல் மூலமாக விவாத களம் நடத்தி மக்களுக்கு உண்மை நிலை அறிய செய்ய வேண்டும்
- ராமசாமி வெங்கட்ராமன்
–வாசகர் கடிதம்–