வைரலாகி வரும் பனி மணப்பெண் சட்டி ஜூலியட்

இந்தியா துணுக்குகள் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

pot bommai - 2026

சமீபத்தில் ஒரு புது மணமகளின் திருமணகோலத்தில் உள்ள புகைப்படம் இணையத்தில் பயங்கர வைரலாக வலம் வருகிறது. அனால் அது கண்டிப்பாக நீங்கள் நிகைக்கும் தீபிகா படுகோனே புகைப்படம் இல்லை.

அப்படி என்ன புகைப்படம் என்று நினைக்கிறீர்களா?. அது “சட்டி ஜூலியட்” (Saddi Juliet) என்ற பெயரை கொண்ட ஒரு அழகான பனி பெண் (snow woman).

சட்டி என்பதன் அர்த்தம் பஞ்சாபியில் ‘எமது’ (our) என்பது பொருள். அதாவது, “சட்டி ஜூலியட்” என்றால் “என்னுடைய ஜூலியட்” (Our Juliet) என்பதுதான் முழுமையான அர்த்தம்.

அந்த பனியாலான மணப்பெண் இந்திய திருமண நகைகளான காதணி, மூக்குத்தி மற்றும் நேத்திசூடி, துப்பட்ட போன்ற ஆபரணங்களை அணிந்து ஒரு அசல் மணப்பெண்ணை போன்று காட்சியளிக்கிறது.

இதுகுறித்து Blog TO வலைப்பதிவின் கருத்துப்படி, ப்ளாம்ப்டன் குடியிருப்பாளர் ஜஸ்யூ கிர்ராவால் (Jassu Kingra) என்பவரால் கையால் செய்யபட்ட ஒரு பனி பொம்மை. அதற்கு இந்திய மணப்பெண்ணை போன்று ஆபரணங்களையும் அணிவித்துள்ளனர்.

அந்த மணப்பெண்ணின் புகைப்படத்தை ஜஸ்யூ கிர்ரா அவரது இன்ஸ்டாக்கிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பின்னர் அந்த புகைப்படம் ட்விட்டர் பக்கத்திலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.