தாய்க்கு அதிக முக்கியத்துவம்!

துணுக்குகள் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

vivekanandaoldpic - 2026

விவேகானந்தரிடம் ஒருவன் ”சுவாமி! குழந்தை உருவாக தந்தையும், தாயும்தான் காரணமாக இருக்கிறார்கள். ஆனால், எல்லோருமே தாயை மட்டும் போற்றுகிறார்களே?” என்று கேட்டான்.

அவனிடம் விவேகானந்தர், ”அதோ அங்கே தெரிகிறதே.. அந்த கல்லை எடுத்துவா” என்றார்.

அவன் அந்தக் கல்லை தூக்கி வந்தான். அது இரண்டு கிலோ எடை கொண்டது.

” இந்தக் கல்லை உன் மடியில் நாலு மணி நேரம் கட்டிக் கொண்டு இரு. பிறகு என்னிடம் வா” என்றார் விவேகானந்தர்.

நாலு மணி நேரம் கட்டிக் கொண்டு இருந்தவன், ”சுவாமி, என்னால் இந்த பாரத்தை தாங்க முடியவில்லை. சிறு சந்தேகம் கேட்டதற்கு இவ்வளவு பெரிய தண்டனை தந்துவிட்டீர்களே’ என்றான்.

விவேகானந்தர் புன்னகைத்தார். ”இந்த இரண்டு கிலோ கல்லை உன்னால் நாலு மணி நேரம் கூட வைத்திருக்க முடியவில்லை. ஆனால், ஒரு தாயானவள் ஏறக்குறைய பத்து மாதம் குழந்தையை சுமக்கிறாள். அதை அவள் பாரம் என்று அலுத்துக்கொள்கிறாளா? அதனால்தான் தாய்க்கு அதிக முக்கியத்துவம்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.