
218வருடங்களுக்கு முன்பு இன்றைய திருப்பத்தூரில் நினைவுதூண் அமைந்த பகுதியில் பனைமரங்கள் குறுக்காக கட்டப்பட்டு அதில் தூக்கு கயிறுகள் தொங்கவிட பட்டுள்ளன.
கூண்டில் அடைத்த மருதுபாண்டியரை கத்தியால் குத்துகின்றனர் .துப்பாக்கி குண்டுகளால் சுடப்பட்டும் தூக்கு கயிற்றில் ஏற்றுகின்றனர்! அதன் பின் அவர்கள் படைகளும் உறவினர்களும் சிறு குழந்தைகள் முதல் அனைவரும் கொல்லப்படுகின்றனர்.
இறந்த உடல்கள் முன்று நாட்கள் வாங்க யாரும் இல்லதாதல் அங்கேயே கழுகுகாளல் தின்னப்படுகின்றனர்.
சிவகங்கையில் இருந்து மருதுபாண்டியர் உறவினர் ஒருவர் வந்து தாம் எநத போராட்டத்திலும் பங்கு பெறவில்லை எனவும் பல்வேறு ஆதாரங்களை செய்தும் முதன் முதலில் குவித்து வைக்கப்பட்ட உடல்களின் அடியில் கிடந்த சின்னமருதுவின் உடலை எடுத்து கதறி அழுகிறார்!
பின்பு இன்றைய மருதுபாண்டியர் மணிமண்டபம் அமைந்துள்ள பகுதி தான் அன்றைய மாயனம்… அங்கு சென்று அனைவரது உடல்களை புதைக்கிறார்.
எம் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் இந்த சிவந்த மண்ணில் குருதி சிந்தி குலம்காத்த மாமன்னர்களுக்கு வீரவணக்கம்.
– விக்ரமன்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை எப்படி பராமரிக்கிறார்கள் ? கர்நாடகாவில் கிட்டூர் சென்னம்மா, திப்பு சுல்தான் ஆகியோர் நினைவிடங்களை எப்படி பாதுகாக்கிறார்கள் என்று பார்க்கும்போது இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகள் மீது கோபம்தான் வருகிறது.



