
தென்காசி மாவட்டம் திருக்குற்றாலத்தில் குற்றால அருவிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. அருவிக்கு நீர் வரத்தை அளிக்கும் மலையில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அருவிகள் காய்ந்து போய் கிடக்கின்றன.
வழக்கமாக கேரளத்தில் பருவ மழை மே மாத கடைசியிலோ ஜூன் மாத முதல் வாரத்திலோ தொடங்கும். ஆனால் இந்த முறை இடையில் உருவான புயல் காரணமாக பருவமழை தொடங்குவது தாமதமானது. இதனால் உங்களின் பல பகுதிகளிலும் வழக்கமான அளவில் மழை பெய்யவில்லை.
கேரளத்தை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மழை சரிவர செய்யாததால் வரட்சியை நிலவுகிறது. கேரளத்தின் பருவ மழை காலங்களில் குற்றாலத்தில் சீசன் என்று சொல்லப்படும் சாரல் சூழல் நிலவும். சாரல் மலையுடன் தென்றல் காற்றும் குளிர்ச்சியான சூழலும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து இழுக்க கூடியது. ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மூன்று மாத காலங்களுக்கு இது போன்ற பருவநிலை நிலவுவது வழக்கம்.
ஆனால் இந்த முறை ஜூன் மாதம் முடிய உள்ள நிலையில் சீசன் கலை கட்டவில்லை. சீசனை நம்பி வியாபாரிகள் பலர் குற்றால அறிவிப்பகுதிகளில் கடைகள் போட்டிருந்தனர் அவர்களும் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். சில நாட்களுக்கு முன் திடீரென ஒரு நாள் பெய்த மழையில் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது அன்றைய நாள் மட்டும் சில மணி நேரங்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது அதன் பிறகு மீண்டும் வறட்சி நிலவுகிறது கடந்த இரு நாட்களாக சனி ஞாயிறு வார விடுமுறை தினங்கள் என்பதால் சீசனை நம்பி வெளியூர்களில் இருந்து பலர் குற்றாலத்துக்கு படையெடுத்தனர் ஆனால் நீரின்றி வறண்டு கிடக்கும் பாறைகளை பார்த்துவிட்டு ஏமாற்றமடைந்தனர்.