December 5, 2025, 7:09 PM
26.7 C
Chennai

நம்ம நாட்டு சுற்றுலா: கொனார்க் சூரியக் கோயில்!

konark sun temple - 2025
#image_title

10. கொனார்க் சூரியன் கோயில் (தொடர்ச்சி)

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

கட்டடத்தின் சிறப்பு:

          கலிங்க கட்டிடக்கலை அமைப்புப்படி, 7 குதிரைகள் பூட்டி, 24 சக்கரங்களுடன் கொண்ட தேரில் சூரியன் எழுந்தருள்வது போல தேர் வடிவில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. 7 குதிரைகள் 7 நாட்களையும், 24 சக்கரங்கள் 24 மணி நேரத்தையும் குறிக்கும். நாழிகை, நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிடும் கால ஓட்டத்திற்கு ஏற்பவும், சூரியனின் நகர்வுக்கு ஏற்பவும், சூரிய ஒளியானது மூலவரின் சிலை மீது படும் வகையிலும் கோயிலைக் கட்டியிருக்கிறார்கள்.

          இந்தக் கோயிலின் தனித்தன்மையை உணர்ந்து, இதை உலக பாரம்பரியச் சின்னமாக அறிவித்திருக்கிறது யுனெஸ்கோ. கலிங்க கட்டிடக் கலையில் விமானம், கோபுரம், கற்ப கிரகம், மக்கள் கூடும் மண்டபம், நாடக/நடன மண்டபம், தரிசன மண்டபம், அன்னதான சாலை, கோபுரம்தான் முக்கிய அங்கங்கள். கோயிலின் கோபுரம் 1676ஆம் ஆண்டிலிருந்து கருப்பு நிறமாக உள்ளது. இதனால் இது ‘கருப்பு பகொடா’ என்று அழைக்கப்பட்டது. பிரதான கோயிலில் 229 அடி உயரம் கொண்டது விமானம். இங்குள்ள மண்டபத்தில் ஜகன்மோஹனா எனப்படும் தரிசன அரங்கம் 128 அடி உயரமுடையது.

தேர்ச்சக்கரத்தின் சிறப்பு

          இங்குள்ள தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் சிறப்பு வாய்ந்தவை. இந்த தேரின் சக்கரத்தை நாம் தினமும் கையாளுகின்றோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதாவது, மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய 10 ரூபாய் நோட்டின் பின்னால் இருப்பது கொனார்க் சூரிய கோயிலின் தேர்ச்சக்கரமே.

          தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 9 அடி, 9 அங்குலம் என்ற கணக்கில் 8 பெரிய ஆரைகளும், பெரிய ஆரைகளுக்கு இடையில் 8 சிறிய ஆரைகளும் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சக்கரம் ஒரு முழு நாளை குறிக்கும். பெரிய 8 ஆரைகள் 24 மணிநேரத்தை 8 ஆகப் பிரிக்கும். அதாவது ஒரு ஆரை 3 மணி நேரக்கணக்கு. இடையில் உள்ள சிறிய ஆரை ஒன்றரை மணி (90 நிமிடங்கள்) நேரக் கணக்கு.

ஒரு பெரிய ஆரைக்கும் ஒரு சிறிய ஆரைக்கும் இடையில் முப்பது முத்துபோன்ற அமைப்புகள் உள்ளது. ஒவ்வொரு முத்தும் 3 நிமிட அளவுகளைக் கொண்டது. இதைக் கொண்டு ஒரு நாளின் நேரத்தை இதில் விழும் சூரிய நிழல் மூலமாகத் துல்லியமாக கணக்கிட முடியும். சக்கரங்கள் முழுவதும் சிற்பங்களாகவே வடிக்கப்பட்டுள்ளன.

கட்டிட நுணுக்கங்கள்

          இக்கோயில் சிவப்பு மணற்பாறை கற்களால் கட்டப்பட்டுள்ளது. கோயிலில் உள்ள பெரும்பாலான கற்கள் அனைத்தும் நுண்ணிய வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்களைக் கொண்டுள்ளன. இது மூன்று வகை கற்களினால் கட்டப்பட்டுள்ளது. இதில், கோண்டலைட் பாறைகள் எனப்படும் பாறை அமைப்புகள் திடம் குறைவானவை. எளிதில் அரிக்கக்கூடியது. இதனை எழிலுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இக்கட்டிடம் சிதைந்ததற்கு இந்த பாறைகூட காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதை வடிவமைத்த கலைஞர்கள் ‘ஆஷ்லார்’ (Ashlar Technique) என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டிடத்தில் கற்கள் சேருமிடம் தெரியாத அளவு இதை வடிவமைத்துள்ளனர். மிகவும் சிறிய இடங்களில் கூட இதை வைத்து அலங்கரித்துள்ளனர். சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும் என்ற விதிப்படி கொனார்க் கோயில் கிழக்கு – மேற்கு வாயில்கள் திட்டவரைவைக் கொண்டது. சூரியன் என்றாலே சமஸ்கிருத முறைப்படி 7 குதிரைகள் (காயத்ரி, திருஷ்டுப், அனுஷ்டுப், பிரகதி, பங்க்தி, ஜகதி, உஷ்ணிக்) பூட்டிய ஒரு தேரில் வருவதாய் தான் உருவங்கள் இருக்கும். அந்த அமைப்பையே அடிப்படையாகக் கொண்டு ஒரு தேர் அமைப்பிலான கோயிலையே கட்டியுள்ளனர்.

          கொனார்க் சூரிய கோயிலுக்கு அருகிலேயே பாழடைந்த நிலையில் இரண்டு கோயில்கள் கண்டு பிடிக்கப் பட்டிருக்கின்றன. அதிலொரு கோயில் சூரிய பகவானின் மனைவியான சாயாதேவியுடையது.

          கொனார்க் கோயிலின் முகப்பில் உள்ள சிலையே சிறப்புமிக்கது. ஏனெனில், பேய்களை அடக்கி ஒரு யானை அதன் மீது படுத்திருக்கும். அந்த யானையை அடக்கி ஒரு சிங்கம் அமர்ந்திருக்கும். இந்த கம்பீர தோற்றமே நம்மைப் புல்லரிக்கச் செய்து நம்மை வரவேற்கும்.

          சூரிய பகவான் சிலை அருகில் உஷா மற்றும் பிரத்யுஷா என்ற இரண்டு பெண் தெய்வங்களின் சிலைகள் உள்ளன. உஷா என்றால் காலை; பிரத்யுஷா என்றால் மாலை. மண்டபத்திலிருந்து வெளியே வரும் படிக்கட்டின் இருபுறமும் பைரவர், யாளி போன்ற சிலைகள் கம்பீரமாய் நிற்கும். பிரதான மண்டபத்தின் வலப்புறம் குதிரையும், இடப்புறம் யானை சிலைகளும் உண்டு. அது தவிர்த்து வலப்புறத்தில் மகாதேவி கோயிலும், சிறிய வைஷ்ணவ கோயிலும் அமைந்திருக்கும். போஜன மண்டபத்தில் சமையலறை, கிணறு போன்ற அமைப்புகளும் உள்ளது.

வியக்கவைக்கும் சிலைகள்

          “இங்கே, கல்லின்மொழி மனிதனின் மொழியைத் தாண்டிச் செல்கிறது” என்று வியந்து கூறியிருக்கிறார் ரவீந்திரநாத் தாகூர். இப்படி அவரை வியக்க வைத்தவை, கொனார்க் சூரிய கோயிலின் சிற்பங்கள். இந்தக் கோயிலுக்கு வரும் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என மூன்று பருவத்தினருக்கும் மகிழ்ச்சி சேர்க்கும் வகையில் தனித்தனியாகச் சிற்பங்கள் அமைந்திருக்கின்றன.

          சிறுவர்களுக்காக விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் சிற்பங்கள் மிகக் குறைந்த உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இளைஞர்களுக்காக ஊடல், கூடல், ஆடல் போன்ற சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. வயதானவர்கள் கண்டுகளிக்க ஆன்மிக சிற்பங்கள் இடம்பெற்றிருக்கின்றன. கோயிலின் அடிவாரம் முதல் கிரீடம் வரை உள்ள சுவர்கள் அழகிய சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மொட்டை மாடிகளில் வீணை, மார்டலா போன்ற பல்வேறு இசைக்கருவிகளை வைத்திருக்கும் ஆண் மற்றும் பெண் இசைக் கலைஞர்களின் கற்சிலைகள் உள்ளன. இதுபோன்ற மக்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள் அனைத்தையும் கல்லிலே காட்சியோட்டம் காட்டுவது போல் ஏராளமான சிற்பங்கள் அமைந்துள்ளன.

          கொனார்க் சூரிய கோயிலைச் சுற்றிப் பார்க்க விரும்பும் இந்தியப் பயணிகளுக்கு 40 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பிற நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு 600 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories