
வட இந்தியாவின் புனித நகரமான அயோத்தியில் காசி தமிழ் சங்கமம் 4.0 இன் கீழ் மாணவர் குழு இரண்டாம் நாள், கலாச்சார பரிமாற்றம் மற்றும் ஆன்மீக ஒற்றுமையின் ஒரு புதிய அத்தியாயத்தைக் கண்டது. இன்று காலை 9 மணிக்கு சிறப்பு பேருந்தில் மாணவர்கள் ராமர்கோவில் வந்தடைந்தபோது, அவர்களின் மகிழ்ச்சியும், உற்சாகமும் தெளிவாகத் தெரிந்தது. “ஜெய் ஸ்ரீ ராம்” என்ற கோஷங்கள் வளாகம் முழுவதும் எதிரொலித்தன. வளாகமே அதிர்ந்தது. தமிழ் பிரதிநிதிகளின் வருகையை ஒரு கொண்டாட்டமாக மாற்றியது. பகவான் ஸ்ரீ ராம் லல்லாவின் முதல் தெய்வீக தரிசனம் அனைத்து மாணவர்களையும் மூழ்கடித்தது.
தமிழ்நாட்டின் அனைத்து மூலைகளில் இருந்தும் வந்திருந்த இந்த மாணவர்கள், மிகுந்த ஒழுக்கத்துடனும் முழுமையான பக்தியுடனும் சாமி கும்பிட்டனர். இந்த தருணம் வடக்கு மற்றும் தென்னிந்தியாவின் பக்தி மரபுகளின் அற்புதமான சங்கமத்தை அடையாளப்படுத்தியது. அங்கு பிராந்திய வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அனைவரும் ஒரே தெய்வத்தின் மீது தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர்.
ராம் லல்லாவுக்கு வணக்கம் செலுத்திய பிறகு, பிரதிநிதிகள் குழு இந்திய கட்டிடக்கலையின் தலைசிறந்த படைப்பான அற்புதமான ராம் தர்பாரை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் சக்தி மற்றும் பக்தியின் அடையாளமான ஸ்ரீ அனுமான் கர்ஹிக்குச் சென்றனர். அனுமான் புனித பீடத்தில், மாணவர்கள் பக்தியுடன் பிரார்த்தனை செய்து, இந்த பண்டைய ஆலயத்தின் ஆழமான ஆன்மீக ஆற்றலை உணர்ந்தனர். இது அவர்களின் வருகையை இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்றியது.
பின்னர் குழு வரலாற்று சிறப்புமிக்க ராம் கி பைடியைப் பார்வையிட்டது. சரயு நதியின் அமைதியான மற்றும் புனிதமான கரையில், இந்த பண்டைய நிலத்தின் இயற்கை அழகை அவர்கள் பாராட்டினர். சரயு நதியின் மென்மையான அலைகள் மற்றும் அமைதியான சூழ்நிலை அனைவரையும் கவர்ந்தது.
இந்த ஆன்மீக பயணத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட மாணவர்கள், இது மிகவும் ஊக்கமளிப்பதாக தெரிவித்தனர். முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. அயோத்திக்கான தங்களது வருகை அவர்களது வாழ்நாள் முழுவதும் அவர்களது நினைவில் நீடித்த மற்றும் நேர்மறையான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக நம்புகிறார்கள்.
இந்த சிறப்பு நிகழ்வான காசி தமிழ் சங்கமம் 4.0, “ஒரே பாரதம், உன்னத பாரதம்” என்ற உணர்வை வலுவாக வளர்க்கிறது. வடக்கு மற்றும் தென்னிந்தியா இடையேயான மரபுகள் மற்றும் பரஸ்பர உறவுகளைப் பகிர்ந்து கொள்ளும் இந்த இணைப்புப் பாலம், புதிய தலைமுறையை நாட்டின் மகத்தான பாரம்பரியம் மற்றும் கலாச்சார நல்லிணக்கத்துடன் வலுவாக இணைத்து, நாடு முழுவதும் தேசிய ஒற்றுமையின் செய்தியைப் பரப்புகிறது.





