தூங்கிக்கிட்டு இருக்கற சிங்கத்தை தட்டி எழுப்பினது யாருய்யா? வைரல் வீடியோ!

அடடே... அப்படியா? இந்தியா பொது தகவல்கள் வீடியோ
lion - 2026

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள மடவப்பூர் என்னும் கிராமத்தில் மக்கள் கூட்டத்துக்கு நடுவே சிங்கம் ஓன்று ஓடிய சம்பவம் வீடியோவாக வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரி சுசந்த நந்தா என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், இளைஞர்கள் சிலர் சாலையில் நின்று கொண்டிருக்க, மிகப்பெரிய சிங்கம் ஓன்று அவர்களை கடந்து வேகமாக ஓடுகிறது.

சிங்கம் தங்களை நோக்கி வருவதை பார்த்த இளைஞர்கள் அங்கும் இங்கும் ஓடி ஒளிந்துகொள்கின்றனர். சுமார் 7 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த காணொளி தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.