ரஜினிக்கும், எனக்கும் அரசியல் தெரியும்! திருநாவுக்கரசர்!

உள்ளூர் செய்திகள் சென்னை பொது தகவல்கள்
thirunavukarasu - 2026

காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் நடிகர் ரஜினிகாந்த் உடன் சந்திப்பு நடத்தினார். போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினி எம்பி திருநாவுக்கரசர் சந்திப்பு நடந்தது.

திருநாவுக்கரசர் – ரஜினிகாந்த் இருவரும் நெருக்கமான நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல், சினிமாவிற்கு வெளியே ரஜினிக்கு இருக்கும் முக்கியமான் நண்பர்களில் திருநாவுக்கரசர் ஒருவர் ஆவார்.

rajini 1 - 2026

ரஜினிகாந்த் உடன் நடந்த சந்திப்பிற்கு என்ன காரணம் என்று திருநாவுக்கரசர் பேட்டி அளித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், என்னுடைய பேரன் பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் பெறவே நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தேன்.

நான் தனியாக வரவைல்லை, ரஜினியை நான் குடும்பத்தோடு சந்தித்தேன். ரஜினி உடனான சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை. மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்தது.

thirunavukkarasar - 2026

ரஜினியுடன் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை. அவருக்கு அறிவுரை வழங்க வேண்டியது கிடையாது. அவருக்கு அரசியல் தெரியும். நான் அறிவுரை வழங்க வேண்டிய நிலையில் ரஜினிகாந்த் இல்லை. அவருக்கு தமிழக அரசியல் தெரியும். அவரின் அரசியல் குறித்து அவரே சுயமாக முடிவு எடுப்பார். நான் மரியாதை நிமித்தமாகவே செய்தியாளர்களை இப்போது சந்திக்கிறேன் என்று திருநாவுக்கரசர் பேட்டி அளித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.