
பெற்ற பிள்ளையை அடித்து தீவைத்து கொன்றனர் அவரது பெற்றோர். மரம்போல் வளர்ந்த மகன் இருந்தாலும் ஒன்றுதான் இறந்தாலும் ஒன்றுதான் என்று எண்ணி விட்டனர் இந்த பெற்றோர்.
அவனை கடுமையாக அடித்து கைகளை கட்டி தலையில் மண்ணெண்ணை ஊற்றி நெருப்பு வைத்து உயிரோடு கொன்றனர் . அந்த தீயை தாங்கமாட்டாமல் அலறித் துடித்து அங்கேயே இறந்தான் அவர்களின் மகன்.
பெற்ற பிள்ளையையே கொல்லத் துணிந்த ஆத்திரம் பெற்றோர் நெஞ்சில் எழுந்ததும் துயரமே!
ஆனால் இவ்வளவு கொடூரமான செயலை இவர்கள் செய்யத் துணிந்ததற்கு காரணம் என்ன?
அவன் மதுவுக்கு அடிமையானதே காரணம். தினசரி குடித்துவிட்டு வந்து தங்களை சித்திரவதை செய்ததே!
மகனின் செயல்களால் வெறுத்துப்போன அந்த முதிய பெற்றோர் இறுதியில் இத்தகைய கொடுஞ்செயலுக்கு துணிந்தனர்.
செவ்வாய் இரவு வரங்கல் ரூரல் மாவட்டம் ‘தாமெர’ மண்டலம் ‘முஸ்தாயபல்லி’ யில் இந்த கொடூரம் நடந்தது.

‘கடாரி’ பிரபாகர், விமலா தம்பதிகளின் மகன் மகேஷ் சந்திரா (42) க்கும் மருமகள் ராதிகாவுக்கும் 2 குழந்தைகள் உள்ளனர்.
வாரங்கல்லில் உள்ள ‘ஏனுமாமுல’ மார்க்கெட்டில் மகேஷ்சந்திரா குமாஸ்தாவாக பணி செய்கிறார். குடிக்கு அடிமையாகி தினமும் குடும்பத்தாரோடு பணம் கேட்டு தகராறு செய்வது வழக்கம்.
கணவனின் பழக்க வழக்கங்களால் வெறுத்துப்போன ராதிகா குழந்தைகளோடு பிறந்த வீட்டுக்கு சென்று விட்டார். அந்த நிலையில் செவ்வாய் காலை மகேஷ்சந்திரா முழு அளவில் குடித்து விட்டு வந்து பெற்றோரோடு தகராறில் ஈடுபட்டான்.
மீண்டும் இரவு குடித்து விட்டு வந்து வீட்டில் பெரும் ரகளை செய்தான். பெற்றோரைத் தாக்கினான். ஆத்திரமடைந்த பெற்றோர் மகனை கம்பால் அடித்து கீழே விழுந்த மகனின் கைகளை கட்டி மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பு வைத்தனர்.
தீவிரமான தீக்காயங்களால் அலறியபடி அவன் உயிரை விட்டான். ‘ தாமெர’ போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.