தவிக்கவிட்ட தறுதலைகள்; எங்களை காப்பாற்றுங்கள்: அமைச்சரிடம் முறையிட்ட முதியோர்!

இந்தியா லைஃப் ஸ்டைல்
IMG 20191114 WA0008 - 2026

எங்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்துங்கள்! மாநில உள்துறை அமைச்சரிடம் முறையிட்ட சீனியர் சிட்டிசன்கள்!

வயது முதிர்ந்த எங்களுக்கு பெற்ற பிள்ளைகளே கருணை காட்டாமல் அலட்சியப்படுத்தி வேதனைக்கு உள்ளாக்குகிறார்கள் என்று பல முதியோர் வருத்தம் தெரிவித்தனர்.

பெற்ற பிள்ளைகளிடமிருந்து குறைந்த அளவு ஆதரவு கூட தங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை என்று புலம்பினர்.

IMG 20191114 WA0009 - 2026

ஹைதராபாதில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து பல முதியோர்களின் பிரதிநிதிகளின் குழு, மாநில உள்துறை அமைச்சர் மஹ்மூத்அலியிடம் விண்ணப்பக் கடிதம் அளித்தனர். மேலும் பெற்ற பிள்ளைகள் அலட்சியமாக நடந்து கொள்கிறார்கள் என்றும் துயரத்திற்கு ஆளாக்குகிறார்கள் என்றும் குறிப்பிட்டனர்.

சிலர் தம் சொத்துகளையும் அக்கிரமமாக பிடுங்கிக் கொண்டனர் என்றும் தாங்கள் சம்பாதித்தவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு விட்டனர் என்றும் குற்றம் சாட்டினார்.

மெயின்டனன்ஸ் அண்ட் வெல்ஃபேர் ஆஃப் பேரெண்ட்ஸ் அண்ட் சீனியர் சிட்டிசன்ஸ் ஆக்ட் 2007 படி தமக்கு பாதுகாப்பு வேண்டும் என்று பல முதியவர்கள் உள்துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர் .

அதற்கு அமைச்சர் முதியோரை அவமதிப்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி டிஜிஓ விடம் உத்தரவிட்டார்.

இதுகுறித்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உத்தரவு பிறப்பித்து முதியோர்களின் புகார்களை உடனுக்குடன் பரிசீலித்து நீதி கிடைக்கச் செய்யவேண்டும் என்று அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.