ஹாங்காங் டென்னிஸ்! பிவி சிந்து நல்ல தொடக்கம்!

Published:

pv sindhu - 2026

ஹாங்காங் ஓபன் பேட்மிட்டன் டோர்ன மென்டில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை, உலகச் சேம்பியன் பிவி சிந்து நன்கு விளையாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.

மிகச் சிறப்பாக ஆடிய சிந்து 21-15, 21-16 என்ற வித்தியாசங்களில் கிம்மை தோற்கடித்தார். தொடக்கத்திலிருந்தே சிந்து உற்சாகமாக ஆடினார். தரவரிசையில் தன்னை விட மிகப் பின்னுள்ள ஷட்லர் மீது முழு அதிகாரம் செலுத்தி ஆடினார். நெஞ்சை வசப்படுத்தும் ஷாட்டுகளோடு ரசிகர்களை மகிழ்வித்த சிந்து எந்த நிலையிலும் போட்டியாளருக்கு மீண்டெழும் வாய்ப்பு கொடுக்கவில்லை.

தென்கொரியா வீராங்கனை ‘கிம் கா உன்’ உடன் நடந்த மேட்சில் சிந்து வெற்றியை வசப்படுத்திக் கொண்டார்.

வலிமையாக ஆடி எளிதாக போட்டியை தன்வசப்படுத்திக் கொண்டார்.

07 Aug 03 Saina - 2026

இரண்டாவது கேமில் கூட சிந்துவுக்கு போட்டி இல்லாமல் போனது . உற்சாகமாக ஆடிய சிந்து எளிதாக வென்று இரண்டாவது ரவுண்டுக்குள் நுழைந்தார்.

ஆனால் மறுபுறம் சாய்னா நேவாலுக்கு சிக்கல் ஏற்பட்டது. சிறிது காலமாகவே பலவீனமான ஆட்டத்தால் போராடிக்கொண்டிருந்த சாய்னா ஹாங்காங் ஓபனிலும் ஏமாற்றத்தை அளித்தார்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

சைனா நாட்டை சேர்ந்த வீராங்கனை ‘காய் யான்’ உடன் நடந்த மேட்சில் சாய்னா தோல்வியடைந்தார். இது நம் சாய்னா தானா என்பது போல் நடந்த போராட்டத்தில் காய், 21- 13, 22 -20 என்ற வித்தியாசத்தில் சாய்னாவை தோற்கடித்தார்.

முதல் செட்டில் சாய்னா முழுவதுமாக ஏமாற்றிவிட்டார். எதிரிக்கு குறைந்த அளவு போட்டி கூட அளிக்கவில்லை. ஆனால் இரண்டாவது கேமில் கொஞ்சம் ஆறுதல் அளித்தார். ஆனால் வெற்றி மட்டும் அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டது.

இன்னொருபுறம் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு கலப்பு பலன் கிடைத்துள்ளது. சமீர் வர்மா முதல் ரவுண்டிலேயே வீட்டை பார்க்க நடந்தார். ஆனால் ஹெச் எஸ் ப்ரணய் முதல் ரவுண்டில் வெற்றி பெற்று சாதித்துள்ளார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img