ஹைதராபாத் பெண் டாக்டர் கொலை எதிரொலி! தெலங்கானாவில் முதல் ஜீரோ எஃப்.ஐ.ஆர்., பதிவு!

திசா கொலை வழக்கின் எதிரொலியால், பின்னர் எடுத்த முடிவுகளின் படி, தெலங்காணாவில் முதல் ஜீரோ எஃப்ஐஆர் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

police station telangana

திசா கொலை வழக்கின் எதிரொலியால், பின்னர் எடுத்த முடிவுகளின் படி, தெலங்காணாவில் முதல் ஜீரோ எஃப்ஐஆர் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

தெலங்காணா மாநிலத்தில் முதல் ஜீரோ எஃப்ஐஆர் வழக்கு பதிவானது. ஹன்மகொண்டாவில் உள்ள ஸ்பேதாரி காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.

திசா சம்பவத்திற்குப் பிறகு எந்த போலீஸ் ஸ்டேஷனில் வேண்டுமானாலும் புகார் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. வரங்கல் கமிஷனரேட் எல்லையில் உள்ள ஹன்மகொண்டாவில் சுபேதாரி காவல் நிலையத்தில் டிசம்பர் 7 சனிக்கிழமை இந்த வழக்கு பதிவானது.

24 வயது இளம்பெண் காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் பெண்ணின் குடும்பத்தார் புகார் அளித்தனர். சாயம் பேட்டை தொகுதியில் கோவிந்தாபூரைச் சேர்ந்த பெண்ணை காணவில்லை என்று சுபேதார் போலீசார் ஃஎப்ஐஆர் பதிவு செய்தனர். பெண்ணின் சிற்றப்பா கொடுத்த புகாரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர்.

ஹன்மகொண்டா நகரில் உள்ள சுபேதாரி காவல் நிலையத்தை முதல் ஜீரோ எஃப்ஐஆர் போலீஸ் ஸ்டேஷனாக வரங்கல் சிபி ரவீந்தர் சனிக்கிழமை காலை அறிவித்தார். பாதிக்கப்பட்டவர் எவராக இருந்தாலும் எந்த காவல் நிலையத்திலும் வேண்டுமானாலும் எஃப்ஐஆர் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

புகாரின் மீது உடனடியாக விசாரணையைத் தொடங்கிய காவல் நிலைய போலிசாருக்கு வரங்கல் சிபி ரவீந்தர் பாராட்டு தெரிவித்தார். இளம் பெண் காணாமல் போன கோவிந்தாபுரம் கிராமம் சாயம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எல்லையின்கீழ் வருகிறது.

ஆனால் அண்மையில் திசா கொலை வழக்கிற்கு பின்னர் எல்லை விவகாரத்தில் தொடர்பு இல்லாவிட்டாலும், எந்த போலீஸ் ஸ்டேஷனிலும் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் சுபேதாரி போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து பின்னர் அதனை சாயம் பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றினர்.

அந்த இளம்பெண்ணின் மொபைல்போன் கால் டேட்டாவை ஆதாரமாகக் கொண்டு, இரண்டு போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த அதிகாரிகளும் வழக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :