ஏப்ரல் 21, 2021, 5:24 மணி புதன்கிழமை
More

  பாரதி வழியில் பாரதம் – பிரதமர் மோடி!

  maxresdefault-17
  maxresdefault-17

  பாரதியின் பாரதம்: பாரதத்தை வழி நடத்துவது பாரதியின் சித்தாந்தமே என்று பாரதியின் பிறந்த நாளில் பிரதமர் ஆற்றிய உரையைத் தமிழில் கேட்போம்.

  மகாகவி பாரதியாரின் 138-வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரதியின் புகைப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

  இந்நிலையில், பாரதியாரின் 138-வது பிறந்தநாளையொட்டி சர்வதேச பாரதி விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர்.

  இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-

  • பாரதியாரின் எழுச்சியை இன்றைய இந்தியாவில் நான் பார்க்கிறேன்
  • ஜகத்தில் உள்ளோர் எதிர்த்த போதிலும் அச்சமில்லை என்றவர் பாரதி
  • துணிச்சலாக செயல்பட்டவர் மகாகவி பாரதி
  • பழமை மற்றும் புதுமையை இணைத்து இந்தியாவை உருவாக்க பாரதி எண்ணினார்
  • தமிழ் மொழியும், தாய்நாடும் இரண்டு கண்கள் என பாரதி நினைத்தார்
  • பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் முன்னேற்றம் குறித்தும் பாரதி பேசினார்
  • பெண்கள் வலிமை பெற வேண்டும், ஆண்களுக்கு நிகராக உயர வேண்டும் என எண்ணியவர் பாரதி
  • பாரதியாரின் புத்தகங்களை நாடு முழுவதும் படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார்.

  பாரதியாரின் 138-வது பிறந்தநாளையொட்டி சர்வதேச பாரதி விழா – பிரதமர் மோடி சிறப்புரை

  • ஜகத்தில் உள்ளோர் எதிர்த்த போதிலும் அச்சமில்லை என்றவர் பாரதி
  • பழமை மற்றும் புதுமையை இணைத்து இந்தியாவை உருவாக்க பாரதி எண்ணினார் – பிரதமர் மோடி

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  Translate »