பூஷ்கர மண்டப பூட்டு உடைப்பு போராட்ட களத்தில் இந்துமுன்னணி. தைப்பூச மண்டபத்துக்கு போடப் பட்ட பூட்டை உடைக்கும் முகமாக போராட்டத்தை அறிவித்தது இந்துமுன்னணி.
இதை அடுத்து இன்று போராட்டக்களத்தில் இறங்கியது. இந்து சமய அறநிலைய துறை செயல் அலுவலருடன் இந்து முன்னணியினர் கடும் வாக்குவாதம் செய்தனர்.
தாமிரபரணி புஷ்கர நிகழ்ச்சிக்கு தடைவிதித்து நெல்லை சந்திப்பில் உள்ள தைப்பூச மண்டபத்தை பூட்டுபோட்ட அறநிலையத்துறையை கண்டித்து நெல்லை மாநகர இந்துமுன்னணி சார்பில் இந்துமுன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் பூட்டை உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.
மண்டபத்திற்கு அருகில் சென்றவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறை ஆய்வாளர் மற்றும் தாசில்தார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் வருகிற திங்கள் கிழமை மாலை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து தைப்பூச மண்டபத்தில் விழா நடத்த சுமூக தீர்வு ஏற்படுத்துவதாக தாசில்தார் உறுதியளித்தார்.



