தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் வயலூரில் அறுவடை செய்த நெல்லை அரசு கொள்முதல் செய்யாததால் மழையில் நனைந்து நெல் முளை விட்டு விட்டது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் நெல்லைக் கொட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி மூலம் அறுவடை செய்த நெல்லை அரசின் நேரடிக் கொள்முதல் நிலையங்கள் மூலமாக கொள்முதல் செய்யாததால் நெல்கள் அனைத்தும் மழையில் நனைந்து முளைகட்டியது.
அவ்வாறு முளைகட்டிய நெல்லை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களாக தஞ்சை மாவட்டம் முழுவதும் அடைமழை பெய்து வந்த நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மழையில் நனைகிறது. எனவே முளைத்து விடும் எனக் கூறி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் தற்போது நெல்கள் அடை மழையில் நனைந்து முளைத்துவிட்டது. அவ்வாறு முளைத்த நெல்லை அரசு கொள்முதல் செய்யாது என்பதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதுகுறித்து தகவலறிந்து வந்த தஞ்சாவூர் தாலுகா காவல் நிலைய போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
சாலை மறியல் குறித்த வீடியோ பதிவு…




