சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமக்கலாம் என்று கூறப்பட்ட தீர்ப்பையும், நடைமுறைப் படுத்துவதில் அவசரம் காட்டும் கேரள அரசியும் கண்டித்து தேனி நேரு சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் உள்ள ஐயப்பா சேவா சங்கம் சார்பாக ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தேனி பழைய பேருந்து முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பின்னர் தேனி பழைய பேருந்திலிருந்து பங்களாமேடு வரை ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தில் பெண்கள் ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்ல லாம் என்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி பெண்கள் கோஷங்கள் எழுப்பப்பட்டன.



