பக்தர்களை தாக்கும் கேரள அரசை கண்டித்து கரூரில் பாஜக., ஆர்ப்பாட்டம்!

சற்றுமுன் தமிழகம் புகார் பெட்டி வீடியோ

கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் தாக்கப்படுவதையும், சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதையும் கண்டித்து கரூரில் சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தினர், பாஜக.,வினர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.

கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆர்.எம்.எஸ் தபால்நிலையம் எதிரே, கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் தாக்கப்படுவதையும், சட்டவிரோதமாக அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதையும் கண்டித்து சபரிமலை பாதுகாப்பு இயகத்தினர் சார்பில் மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்திற்கு, கரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். திருச்சி கோட்ட இணை பொறுப்பாளர் கே.சிவசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, புண்ணிய பூமியான ஐயப்பனின் ஆலயத்தில் அங்கு ஆளும் கம்யூனீஸ்ட் கட்சியானது அரசியல் செய்வதாகவும், அதை ஐயப்ப பக்தர்கள் ஒரு போதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் அப்பாவி ஐயப்ப பக்தர்களை தாக்கி வரும் கம்யூனீஸ்ட் அரசினை கண்டித்து தமிழகம் மட்டுமில்லாமல் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கே.பி.மோகன், ஆர்.எஸ்.எஸ் மாவட்ட தலைவர் குணசேகரன், இந்து முன்னணி கோட்டத்தலைவர் கனகராஜ், பாரதீய மஸ்தூர் சங்கம் மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம், பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் தரகம்பட்டி கைலாசம், கரூர் கிருஷ்ணமூர்த்தி, சுப்பிரமணி, அருண், பரணி, காந்திமதி, மாவட்ட மகளிரணி தலைவி சித்திரை செல்வி, தமிழ்வாணன், ராமநாதன் பிள்ளை மற்றும் ஐயப்ப பக்தர்களும், சபரிமலை பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கேரள அரசிற்கு எதிரான முழக்கங்கள் எழுப்பினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.