தமிழகத்தில் கஜா புயலின் பாதிப்பை குறித்து மத்திய அரசிடம் அதிகம் கூறினால்தான் உதவி கிடைக்கும் என்று கரூரில் மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை பேட்டி அளித்தார்.
மக்களை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., கீதா, மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் உள்ளிட்டோர் கரூர் மாவட்டத்தில் பொது மக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டு வருகின்றனர். இன்று புலியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குச் சென்று பொது மக்களிடம் மனுக்களை பெற்ற அவர் செய்தியாளர்களக்கு பேட்டி அளிக்கும் போது,
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் போது எதிர்கட்சி அப்பகுதியில் நிவாரணம் வழங்கவில்லை என்று மக்களை துண்டி விட்டு பல்வேறு போராட்டங்கள் செய்து வருகிறன்றனர்.
இது அரசியல் கிடையாது பொது மக்களுக்கு தேவையான நிவாரண நிதிகளை வழங்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் தலைமையில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. நிவாரணம் வழங்கிய பின்னர் அதில் உள்ள குறைகளை எதிர்கட்சிகள் சொல்லட்டும், உதவிகள் செய்யும் போதே குறைகளை சொல்லி வருகின்றனர்.
கஜா புயலை வைத்து கொண்டு ஸ்டாலின் தேர்தல் களத்துக்காக அரசியல் செய்வது ஏற்றுகொள்ள முடியாது அது தவறான செயல் இதை ஸ்டாலினிடம் அன்போடு கேட்டு கொள்கிறேன். பிள்ளைய கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி வருகிறார் ஸ்டாலின் இதுதான் உண்மை, இதை தமிழக அரசு கண்டிக்கிற நிலையில் இல்லை என்றும், வருத்தப்படுகிறோம் என்றார்.