தென்காசி அருகே உள்ள கணக்கப்பிள்ளைவலசையை சேர்ந்தவர் தவசி மகன் சுரேஷ் (வயது 32) இவர் மர அறுவை மில்லில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சக்தி (வயது 29) மகன் அன்புச்செல்வன் (வயது7) மகள் மதுபாலா (வயது 5). இவர்கள் நான்கு பேரும் ஒரே மொபட்டில் கடையம் அருகே உள்ள சுரேஷின் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மாலையில் தென்காசி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிள் கடையத்தை அடுத்துள்ள எல்லைப்புள்ளி என்கிற ஊர் அருகே வந்தபோது தென்காசியில் இருந்து கடையம் நோக்கி வந்த ஆம்னி வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக சுரேஷ் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் சுரேஷ், சக்தி, அன்புச்செல்வன், மதுபாலா, ஆகிய 4 பேரும் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தகவலறிந்த ஆலங்குளம் டிஎஸ்பி ரமேஷ், மற்றும் பாவூர்சத்திரம் போலீசார் விரைந்து வந்து 4 பேரின் உடலையும் கைப்பற்றி தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக பாவூர்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விபத்தில் பலியானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி -கடையம் சாலையில் விபத்து நால்வர் பலி
Popular Categories



