கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் தமிழக முதல்வர் நிவாரண உதவி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் தமிழக முதல்வர் நிவாரண உதவிகளை இன்று வழங்கினார்.  நாகை மாவட்டத்தில் கடந்த 16 -ம் தேதி அதிகாலை கரையை கடந்த மாவட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த 12 நாட்கள் கடந்தும் புயல் பாதிப்புகளை தமிழக முதல்வர் நேரில் வந்து காணவில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மட்டும் இன்றி பல்வேறு கட்சியினரும் முன் வைத்த நிலையில் இன்று நாகை மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண உதவிகளை வழங்கி பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

முன்னதாக நாகப்பட்டினம் ஒன்றிய அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கஜா புயலால் பாதிக்கப்பட்ட 441 பயனாளிகளுக்கு 96 லட்சத்து 60 ஆயிரம் 543 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை புயலின் போது உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து மாவட்டத்தின் பாதிப்புகளுக்கு உள்ளான பகுதிகளையும், முகாம்களில் தங்கியுள்ள மக்களையும் சந்தித்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக முதலமைச்ச்ர் எடப்பாடி கே.பழனிச்சாமி நாகையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 443 நபர்களுக்கு 90 லட்சத்து 60 ஆயிரத்து 540 மதிப்பில் நிவாரண உதவிகளை வழங்கினார்.

கஜா புயலில் உயிர் இழந்த 3 நபர்களுக்கு தலா 10 லட்சம் வீதம் ரூ. 30 லட்சத்தை வழங்கினார். முழுவதும் சேதம் அடைந்த 384 குடிசை வீடுகளுக்கு ரூ 57 லட்த்து 60 ஆயிரம்  வழங்கினார்.

வருவாய் துறை, மீன்வளத் துறை, வேளாண்மைத் துறை, மின்சாரத் துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடை துறை ஆகிய 6 துறைகளின் சார்பில் இவை வழங்கப்பட்டன.