பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, ஈரோடு நகருக்கு வந்திருந்தார் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக 3-வது இடத்துக்குச் சென்றது போல் திருவாரூர் தேர்தலில் சென்று விடும் என்று எண்ணியே தனது கூட்டணிக் கட்சிகளின் மூலமாக திருவாரூர் தேர்தலை நிறுத்தியுள்ளது.
50-ஆண்டுகள் அரசியல் நடத்திய திமுக.,வை இயக்குவது யார்? திமுக.வை இப்போது இயக்குவது ஸ்டாலின் அல்ல. திமுக.,வை தற்போது பிரிவினைவாத சக்திகள் வழிநடத்துகின்றன என்று கூறினார் .
மேலும், மத்திய அரசு தமிழக மக்களுக்கு எதிரான எந்தத் திட்டங்களையும் கொண்டு வராது! திமுக- காங்கிரஸ் ஆட்சியில் தான் பாத்தேன் சிரித்தேன் துடித்தேன் நடித்தேன் என்று மீத்தேனைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் கொண்டு வந்த திட்டம் தமிழகத்துக்கு பாதகமானது என்பதால்தான், மோடி நாடாளுமன்றத்தில் அதை தடுத்து, தமிழகம் பாதிக்கப் படுகிறது என்றால் அது இந்தியாவுக்கு பாதிப்பு! அந்தத் திட்டத்தை கொண்டு வரக்கூடாது என்று தடுத்தார்.ஃப்ராக்கிங் முறையில், ஹை ப்ரஷர் என்று சொல்லக் கூடிய அழுத்தம் கொடுத்து மீத்தேனை வெளியில் எடுக்கும் திட்டத்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்று அறிஞர் வெங்கட்ராமன் என்பவர் கூறியதைக் கேட்டு அத்தகைய முடிவுக்கு வந்த மோடி, எல்லா இடங்களிலும் எடுக்கப்படுவது போன்ற போர்வெல் கிணறு வகையில் எடுக்க திட்டத்தை மாற்றினார்… என்று கூறினார்.
அப்போது ஒரு செய்தியாளர், விவசாய விளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைத்து மின்சாரத்தை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வருகின்றனர்… கேரளத்தைப் போல் சாலை வழியாக நிலத்தடியில் கேபிள் அமைத்து கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனரே என்று கேட்டார்.
அதற்கு ஆவேசமாக பதில் அளித்த ஹெச்.ராஜா, தாம் கேரளத்துக்கான பாஜக., பொறுப்பாளர் என்ற விதத்தில், கேரளத்தில் அவ்வாறு அமைக்கப்படவில்லை என்றும், எந்த நாடுகளிலும் 600 கேவி மின்சார கேபிளை நிலத்தடியில் கொண்டு செல்ல வழியில்லை, அந்த தொழில்நுட்பம் எங்கேயும் இல்லை. எனவே யாரோ சொல்வதைக் கேட்டுவிட்டு இப்படி எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது என்று கூறினார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா (காணொளி – வீடியோ)