ஐந்தரை ஆண்டுகளுக்குப் பின் பேட் செய்து… முதல் பந்தில் பவுண்டரி! அசத்தல் சச்சின்!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல் விளையாட்டு
sachinbatt - 2026

ஐந்தரை ஆண்டுகளுக்கு பின் பேட் செய்த சச்சின் : முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அசத்தினார்

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனையின் சவாலை ஏற்ற சச்சின் டெண்டுல்கர் ஒரே ஒரு ஓவர் மட்டும் பேட்டிங் செய்தார்.

sachin bat1 - 2026

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிதிரட்டும் நோக்கத்தில் 10 ஓவர்கள் கொண்ட கண்காட்சி போட்டி மெல்பர்னில் நடைபெற்றது.

sachin bat - 2026

இந்த போட்டியில் தனது பந்துவீச்சை சச்சின் எதிர்கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை எல்லீஸ் பெர்ரி சவால் விடுத்திருந்தார்.

இதனை ஏற்றுகொண்ட சச்சின் ஒரு ஓவர் மட்டும் பேட் செய்தார்.

ஐந்தரை ஆண்டுகளுக்கு பின் தான் எதிர்கொண்ட பந்துவீச்சை பவுண்டரியுடன் அவர் தொடங்கியது ரசிகர்களை பரவசப்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.