கொரோனாவிற்கு புதிய பெயர்! உலக சுகாதர நிறுவனம் அறிவிப்பு!

Published:

korona - 2026

சீனாவில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் உயிர்களை பலிகொண்ட கொரோனா வைரசிற்கு ‘கோவிட் 19’ (COVID-19) என உலக சுகாதார நிறுவனம் (WHO) பெயரிட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸிற்கு இதுவரை 1100 பேர் உயிரிழந்துள்ளனர். 42,708 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரேயேசஸ் கூறும்போது, கொரோனா வைரசிற்கு கோவிட்-19 என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தப் பெயர் பூமியில் எந்தவொரு இடத்துக்கோ, மிருகத்துக்கோ, தனிநபருக்கோ, குழுவுக்கோ இதுவரை வைக்கப்படவில்லை. அதேவேளையில் உச்சரிக்கக் கூடியதாகவும், நோய்க்கு தொடர்புடையதாகவும் இந்தப் பெயர் உள்ளது என்றார்.

சி ஓ வி ஐ டீ என்ற இந்தப் பெயரில் சி ஓ என்பது கொரோனா என்ற வார்த்தையையும், வி ஐ என்பது வைரஸ் என்ற வார்த்தையையும், டீ என்பது டிசீஸ் எனப்படும் நோய் என்ற வார்த்தையையும் குறிப்பதாகவும் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

கொரோனா வைரஸை தவறான பெயர்களைக் கொண்டு குறிப்பதைத் தடுக்கும் விதமாகவே இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவில் கொரோனா வைராசால் பாதிக்கப்பட்டுள்ளர்களில் 99 சதவீதம் பேர் அவசர நிலை சிகிச்சை கட்டத்தில் உள்ளனர். இது உலகின் மற்ற பகுதிகளுக்கும் மிகப் பெரிய அசுசுறுத்தலாக விளங்குகிறது. கொரோனா, சார்ஸ் வகை வைரஸ் குடும்பத்தை சார்ந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img