சிறுவனின் கழுத்தை இறுக்கிய சுருக்கு ! துரிதமாய் செயல்பட்டு சிறுமி தந்த வியப்பு ! வைரலாகும் காணொளி காட்சிகள் !

Published:

lift1 - 2026துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.மனதை பதபதைக்க வைக்கும் இக்காட்சி வலைதளங்களில் வைரலாகிறது.lift 1 - 2026வீடியோ தொடங்கும்போது ஒரு சிறுமி லிஃப்ட்டில் உள்ளார். அவரைத் தொடர்ந்து இரண்டு சிறுவர்கள் லிஃட்டுக்குள் வருகிறார்கள். அதில் ஒரு சிறுவன் கையில் கயிற்றை வைத்து விளையாடியவாறே உள்ளே நுழைகிறான். அடுத்த சில நிமிடங்களில் லிஃப்ட் மேலே செல்கிறது. அப்போது சிறுவனின் கையிலிருந்த கயிறு லிஃப்ட் கதவில் சிக்கி அதன் மறுமுனை சிறுவனின் கழுத்தை இறுக்கி லிஃப்டின் மேலே தூக்கி நிறுத்துகிறது.

இதைக் கண்ட அருகிலிருந்த சிறுமிகளில் ஒருவர், பதறாமல் ஒரு கையில் சிறுவனின் கால்களைப் பிடித்துக்கொண்டு மறு கையில் லிஃப்ட் பட்டனை அழுத்தி கயிற்றின் அழுத்தத்தைக் குறைக்க முயற்சி செய்கிறார். பின்னர் வேகமாக, கழுத்தில் சிக்கிய கயிற்றை எடுக்க முயல்கிறார். இறுதியில் கயிறு கீழே இறங்குகிறது. அப்போது வேகமாகச் சிறுவனை அதிலிருந்து வெளியேற்றிக் காப்பாற்றி விடுகிறார். அந்தச் சிறுமி துரிதமாகச் செயல்பட்டுள்ளார்’, சிறுமிக்கு வாழ்த்துக்கள் இது போன்ற பல்வேறு கருத்துகள் சமூகவலைதளத்தை ஆக்கிரமித்துள்ளன.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

Related articles

Recent articles

spot_img