தமது பேச்சு தவறாக எடிட் செய்யப் பட்டு வேண்டுமென்றே சமூகத் தளங்களில் பரப்பப் பட்டு அவதூறு செய்யப் படுவதாக வைணவ அறிஞரும் சென்னை பல்கலையில்., பேராசிரியராக பணி புரிந்தவருமான எம்.ஏ.வேங்கடகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட விளக்கத்தில்
கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் சென்ற ஜூலை மாதம் 19ஆம் தேதி கேரள பிராமண சமாஜத்தின் மூலம் அனைத்துலக தமிழ் பிராமணர்கள் கருத்தரங்கம் மூன்று நாள்கள் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட கேரள மாநில உயர் நீதிமன்ற நீதிபதி உட்பட அனைவரும் பிராமண சமுதாயத்தின் சிறப்புகளைப் பற்றி பேசினார்கள். நான் பேசும்போது திருக்குறளில் ஒழுக்கமுடைமை என்கிற அதிகாரத்தில் உள்ள மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் என்ற குறளை எடுத்துக்கொண்டு, பிராமண சமுதாயத்தில் பிறப்பொழுக்கம் என்பது பற்றி பேசினேன்.
அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் என்று, உயிரினங்கள் அனைத்திற்கும் கருணை காட்டுவது அந்தணர்களுடைய/ பிராமணர்களுடைய பிறப்பு ஒழுக்கம் என்று நான் விளக்கமாகச் சொன்னேன். இதற்கு ஒரு சில உதாரணங்களையும் நான் காட்டினேன்.
எந்த இடத்திலும் நான் மற்ற சாதியினரைக் குறை கூறிப் பேசவில்லை. எந்த இடத்திலும் நான் பிராமண சாதியானது மற்ற சாதிகளை காட்டிலும் உயர்ந்தது என்றும் கூறவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏறக்குறைய நான் அரை மணி காலம் பேசிய பேச்சில் ஒரு நான்கு நிமிடத்தை மட்டும் போட்டு நான் பேசிய விஷயத்தைத் திரித்துக் கூறுகிறார்கள்.
நான் பேசிய பேச்சின் முழு வீடியோவை பார்த்தால் நான் சொல்வது உண்மை என்பது அனைவருக்கும் புரியும்… என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, எம்.ஏ.வேங்கடகிருஷ்ணன் சாதி உயர்வு தாழ்வு குறித்தும் சாதீய ரீதியாகப் பேசியதாகவும் புகார் மனுவை விளம்பர நோக்கில் தனிப்பட்ட மற்றும் அமைப்பு ரீதியாக ஓரிருவர் அளித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின.
இந்த நிகழ்ச்சியில் எம்.ஏ.வேங்கடகிருஷ்ணன் பேசியவற்றின் முழு வீடியோ ஒளிப்பதிவு…
அநà¯à®¤à®£à®°à¯ எனà¯à®ªà¯‹à®°à¯ அறவோர௠மறà¯à®±à¯†à®µà¯à®µà¯à®¯à®¿à®°à¯à®•à¯à®•à¯à®®à¯ செநà¯à®¤à®£à¯à®®à¯ˆ பூணà¯à®Ÿà¯Šà®´à¯à®•à®²à®¾à®©à¯ – எனà¯à®®à¯ கà¯à®±à®³à¯ – நீதà¯à®¤à®¾à®°à¯ பெரà¯à®®à¯ˆ, ரிஷிகளை அநà¯à®¤à®£à®°à¯ என அழைதà¯à®¤à¯ à®®à¯à®©à®¿à®µà®°à¯ பறà¯à®±à®¿ வளà¯à®³à¯à®µà®°à¯ கூறியà¯à®³à¯à®³à®¾à®°à¯, அதை பாரà¯à®ªà¯à®ªà®©à®°à¯‹à®Ÿà¯ இணைபà¯à®ªà®¤à¯‡ தவறà¯