கர்ப்பிணி மனைவியும் கணவரும் சடலமாக மீட்பு! இந்திய தம்பதிகளுக்கு அமெரிக்காவில் நேர்ந்தது என்ன?

Published:

newjercy 1

அமெரிக்காவில் உள்ள ஹட்சன் நதியில் கடந்த ஞாயிறன்று காலை 7 மணிக்கு மன்மோகன் மால் என்ற நபர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்நிலையில் இவரை அடையாளம் கொண்ட போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கே மன்மோகன் மாலின் காதல் மனைவி கோத்தாரி கரிமா உடலில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இருந்தார்.

இதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில் உயிரிழந்த அந்த பெண் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையின் முடிவில் உயிரிழந்த கர்ப்பிணி பெண் கரிமா கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதனால் மன்மோகன் மால் தனது மனைவியை கொலை செய்துவிட்டு பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

எனினும் இருவரையும் யார் கொலை செய்தார், எதற்காக இந்த சம்பவம் நடந்துள்ளது என தீவிர விசாரணையில் போலீசார் இறங்கியுள்ளனர்.

newjercy

கோத்தாரி கரிமா அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியில் ஒரு இந்திய உணவகத்தைத் தொடங்கினார். தற்போது அந்த பகுதியில் கொரோனா வேகமாக பரவி வருவதால் இவர் தனது உணவகத்தை கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி மூடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

இந்நிலையில் கர்ப்பிணியாக இருந்த இவரின் மரணமும் அவரது கணவரின் மரணமும் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related articles

Recent articles

spot_img