உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியதாக… அமெரிக்கா அறிவிப்பு!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
menendez
menendez

உலக சுகாதார அமைப்பிலிருந்து முறைப்படி அமெரிக்கா வெளியேறியதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா.

இன்றைய நிலவரப்படி, அமெரிக்காவில் 30,48,072 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 9,18,298 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். 1,33,322 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு நோய்த் தொற்று பரவல் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு சரியான நேரத்தில் எச்சரிக்கவில்லை எனவும், சீனாவிற்கு ஆதரவாக அந்த அமைப்பு செயல் படுவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினர்.

தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பிற்கான நிதியை நிறுத்திய ட்ரம்ப், அந்த அமைப்பில் இருந்து விலகப் போவதாகவும் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பில் இருந்து முறைப்படி அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவை விலக்கிக் கொண்டதாக, ஜனநாயகக் கட்சியின் செனட்டர் ராபர்ட் மெனண்டெஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.