ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்க்க குழந்தைகளுடன் சென்ற தாய்

Published:

isis-children ரஷ்ய பெண் ஒருவர் தன் குழந்தைகளை ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் சேர்த்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் செசன்யா மாகாணத்தைச் சேர்ந்த இப்பெண், நெதர்லாந்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 7, 8 வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நெதர்லாந்தின் மான்செஸ்டர் நகரில் வசித்து வந்த இவர்களிடையே ஏற்பட்ட பிணக்கால் இருவரும் பிரிந்துள்ளனர். அந்தப் பெண்ணை அவரது கணவர் விவாகரத்து செய்ததைத் தொடர்ந்து அந்தப் பெண் தனது 2 பெண் குழந்தைகளை, கிரீஸ் நாட்டுக்கு விமானம் மூலம் கடத்திச் சென்றுள்ளார். அங்கிருந்து சில ஐரோப்பிய நாடுகளைக் கடந்து, ஐ.எஸ்-யின் தலைமையகமாக விளங்கும் சிரியாவின் ரக்கா நகரத்துக்குச் சென்றுள்ளார். அங்கே தனது குழந்தைகளை ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்த்துள்ளார். இந்தத் தகவலை நெதர்லாந்து அரசு உறுதி செய்துள்ளது. https://www.youtube.com/watch?v=bEuBoRAJBRw

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img