காண்க: நேரலையில் செய்தி வாசிக்கும் போது.. கட்டப்பட்ட பல் திடீரென கழன்று… சமாளித்த பெண்!

Published:

ukrain-anchor
ukrain-anchor

உக்ரேனிய செய்தி தொகுப்பாளர் ஒருவர் செய்தி வாசித்துக் கொண்டிருந்த போது, அவரது பல் வாயில் இருந்து திடீரென விழுந்தபோது மிகவும் கூலாக அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப் படாமல், பல்லை கையில் எடுத்துக் கொண்டு, தொடர்ந்து செய்தி வாசித்து, பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

உக்ரைன் நாட்டின் டி.எஸ்.என் சேனலின் தொகுப்பாளரான மரிச்சா படல்கோ, இரவில் பிரைம்-டைம் நிகழ்ச்சியின் போது செய்தியை நேரலையில் படித்துக்கொண்டிருந்தார். அப்போது, ​​அவரது முன் பல்லின் ஒரு பகுதி வெளியே விழுந்தது.

படல்கோ வெறுமனே பல்லைப் பிடிக்க கையை உயர்த்தி தனது அறிக்கையைத் தொடர்ந்தார். இருப்பினும், காணாமல் போன பல்லின் இடைவெளி பார்வையாளர்களின் கழுகுக் கண்களில் பட்டுவிட்டது. இது விரைவிலேயே ஆன்லைன் ஊடகங்களில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி விட்டது!

“ஆமாம், டி.எஸ்.என் இன் நேரடி ஒளிபரப்பின் போது இன்று எனது முன் பல்லின் ஒரு பகுதியை நான் இன்று 9:00 மணிக்கு இழந்துவிட்டேன்,” என்று அவர் தனது தனிப்பட்ட சோஷியல் மீடியா கணக்கில் எழுதினார்!

அவரது இந்த செய்கையின் வீடியோ கிளிப் வலைத்தளங்களில் பரவத் தொடங்கியது. “நேரடி ஒளிபரப்பு அற்புதம், ஏனெனில் இது எப்போதும் கணிக்க முடியாதது” என்று சமூக ஊடகங்களில் அவர் எழுதினார்! இந்த சம்பவம் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்த அவர், “மிகவும் அபூர்வமான ஓர் அனுபவம்” என்று குறிப்பிட்டார். இது போன்ற ஒன்று ஒரு தொகுப்பாளராக தனது இருபது ஆண்டுகால வாழ்க்கையில் ஒருபோதும் நிகழ்ந்ததில்லை… என்று குறிப்பிட்டார் அவர்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

“இந்த சம்பவம் பொதுவாக யாராலும் கவனிக்கப்படாமல் போகும் என்று நான் நினைத்தேன். இந்த எபிசோட் அதற்காகவே டிஎஸ்என் யூடியூப் சேனலில் வெளியிடப் படவில்லை. ஆனால் எங்கள் பார்வையாளர்களின் கவனத்தை நாங்கள் குறைத்து மதிப்பிட்டு விட்டோம்” என்று அவர் எழுதினார்.

அங்குள்ள பிரபலமான சமூக ஊடகப் பதிவர் @ekulka தனது டைம்லைனில் இதை வெளியிட்ட பிறகு இந்த வீடியோ பெரும்பாலான மக்களின் கவனத்தை ஈர்த்தது.

அந்த வீடியோவை இந்த இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பாருங்கள் …

https://www.instagram.com/p/CCqr6gsJ-1_/?utm_source=ig_web_copy_link

10 ஆண்டுகளுக்கு முன் தனது மகளுடன் ஏற்பட்ட ஒரு விபத்தில் இந்தப் பல் உடைந்தது என்று மூன்று குழந்தைகளின் தாயான படல்கோ விளக்கினார். “என் படுக்கையறையில் எனக்கு ஒரு ஹெவி மெட்டல் அலாரம் கொண்ட கடிகாரம் இருந்தது, ஒரு முறை என் சிறிய மகள் நான் தூங்கும்போது அதைப் பிடித்திழுக்க, என் முன் பல் உடைந்தது அதுதான் விபத்தில் விளைந்தது! என்றார்.

“இந்த சம்பவம் முழுவதும், எனக்குக் கிடைத்த ஆதரவின் அளவு – கருத்துக்களிலும், தனிப்பட்ட செய்திகளிலும் நான் தனிப்பட்ட முறையில் கவனிக்கப் பட்டுள்ளேன்,” என்று தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த நேரத்தில், அமைதியாக இருந்ததற்கும், தொழில்முறை திறனைக் காட்டியதற்கும் தன்னைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டார் படால்கா.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

Related articles

Recent articles

spot_img