ஆற்றில் மிதந்த தலையில்லா பெண் சடலம்!

Published:

Screenshot_2020_0814_114914

சுவிஸில் பெர்ன் மண்டலத்தில் ஆரே ஆற்றில் தலை இல்லாத பெண்ணின் சடலம் ஒன்றை வழிபோக்கர் ஒருவர் கண்டறிந்து போலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

விசாரணையில் அந்த சடலம் 22 வயது எரித்திரிய பெண் என தெரியவந்துள்ளது. ஆரே ஆற்றில் செவ்வாய்க்கிழமை மாலை தலையில்லாத சடலம் ஒன்று மிதப்பதாக நேரிடையாக பார்த்த ஒருவர் போலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

சடலம் ஆணா அல்லது பெண்ணா என்பது தமக்கு உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் அவர் போலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த மண்டல போலிசார், சடலத்தை கரைக்கு கொண்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்ததுடன், புதனன்று இச்சம்பவத்தை உறுதி செய்தனர்.

தலையில்லாத சடலமாக மீட்கப்பட்டவர் 22 வயதான எரித்திரிய பெண் எனவும், பெர்ன் மண்டலத்தில் குடியிருந்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதற்கு மேல் அதிக தகவல்களை போலிஸ் தரப்பு வெளியிட மறுத்துள்ளது. மேலும், விசாரணை துவக்கப்பட்டுள்ளதாக மட்டும் தெரிவித்துள்ளது. மட்டுமின்றி, சடலத்தில் தலை இல்லை என்பது தொடர்பில் எந்த கருத்தையும் வெளியிட போலிசார் மறித்துள்ளனர்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

விசாரணை அதிகாரிகளின் கூற்றுப்படி, குற்றச்சம்பவம் நடந்ததிற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img