இந்திய அணியை வீழ்த்த எந்த திட்டமும் வேண்டாம்: ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல்

Published:

Australians-Indians-Glenn-Maxwell உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்ள தனியாக எந்த திட்டமும் போட வேண்டியதில்லை என்று ஆஸ்திரேலிய அணி வீரர் மேக்ஸ்வெல் கூறியுள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் மார்ச் 26-ஆம் தேதி அரையிறுதிப் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இப்போட்டி குறித்து கூறிய ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல், இதுவரை எந்தப் போட்டியிலும் தோற்காத இந்திய அணியை, எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள் என்று ஆஸ்திரேலிய அணியிடம் கேட்கிறார்கள். இந்தியாவை, ஆஸ்திரேலியா எப்படி எதிர்கொண்டது என்பது அனைவருக்குமே தெரியும். நடந்து முடிந்த முத்தரப்புத் தொடரில், இந்தியா ஒரு வெற்றியைக்கூடப் பெறவில்லை. இதை இந்திய அணி நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவை அரையிறுதியில் எதிர்கொள்ள தனியாக எந்த திட்டமும் போட வேண்டியதில்லை. இதற்கு முன்பு இந்தியாவை எப்படித் தோற்கடித்தோமோ, அதே பாணியில் இப்போதும் சந்திப்போம். இந்திய-ஆஸ்திரேலியப் போட்டியை மிகப்பெரிய போட்டிபோல கிரிக்கெட் நிபுணர்களும், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களும் வர்ணிக்கிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரையில், ஆஷஷ் தொடர்தான் மிகப்பெரிய போட்டியாக இன்னும் நீடிக்கிறது. தற்போது இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. நன்றாக விளையாடாவிட்டால் அவர்கள் அரையிறுதி வரை வந்திருக்க முடியாது என்று கூறினார்.

ALSO READ:  சோகமான நாள்; திபெத், நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளம், நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img