தடுப்பூசி போட மூதாட்டியாக தகிடுதத்தம்!பிடிபட்ட இளம்பெண்கள்!

உலகம் கிரைம் நியூஸ் சற்றுமுன்
us
us

அமெரிக்காவில் இரண்டாவது தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்காக வந்த இரண்டு பெண்களின் அடையாள அட்டையை பரிசோதித்து பார்த்ததில் அவர்கள் மோசடி செய்தது தெரியவந்ததால் சுகாதார துறையினர் போலீசாரிடம் புகார் செய்துள்ளனர்.

அவர்கள் தடுப்பூசி போடுவதற்காக இணையத்தில் பதிவு செய்யும் போது தங்களை 65 வயதை தாண்டியவர்கள் என்று தெரிவித்து இருக்கிறார்கள். வயதானவர்கள் போல் உடையணிந்து, மாஸ்க் போட்டுகொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர்களின் அடையாள அட்டையில் அவர்களின் உண்மையான வயது 34 மற்றும் 44 என்பது காட்டிவிட்டது.

சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரித்ததில் அவர்கள் ஏற்கனவே இதே போன்று முதல்டோஸயும் போட்டுக் கொண்டது தெரியவந்தது. கொரோனா தடுப்பூசி முதலில் முன்னுரிமை வழங்கி முதியோர்களுக்கு போடும் வாய்ப்பை தட்டிப் பறிக்க முயன்றதாக கூறி போலீசார் அவர்களை கடிந்து அந்த இடத்தை விட்டு வெளியேற்றினர்.

போலீசார் அவர்களை கைது செய்யாமல் எச்சரித்து அனுப்பியுள்ளார்கள். எனினும் இந்த விஷயம் சம்பந்தமாக அவர்களின் மேல் குற்றசாட்டுகள் பதிவு செய்யப்படலாம் என்று தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.