COVID-19 தொற்றுநோய் உலகிற்கு ஜூம் மீட்டிங்கை அறிமுகப்படுத்தியது. தொற்று நோய் பரவல் மத்தியில், கூட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் ஆலோசனைகளை நடத்துவதில் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக Zoom செயலி உள்ளது. ஆனால், அதே சமயத்தில் சில தர்மசங்கடங்களையும் ஏற்படுத்துகிறது.
சமீபத்தில், ஒரு தென்னாப்பிரிக்க தலைவர் பாராளுமன்ற ஜூம் கூட்டத்தில் பங்கேற்றார். இது தேசிய அளவில் நேரலையாக ஒளிப்ரப்பட்டது.
சோலிலே என்டேவ் (Xolile Ndevu) என்பவர் தேசிய பாரம்பரிய தலைவர்கள் மன்றத்தில் உறுப்பினராக உள்ளார். மார்ச் 30 அன்று நடந்த கூட்டத்தில் தென்னாப்பிரிக்காவில் COVID-19 இறப்புகள் குறித்து, அங்குள்ள 23 தலைவர்களுடன் ஜூம் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.
அப்போது அவரது மனைவி தற்செயலாக நிர்வாணமாக தோன்றியதால், அவருக்கு பெரும் தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகத்தில் இந்த வீடியோ மிகவும் வைரலாகியது அவருக்கு பெரும் சங்கடத்தை கொடுத்துள்ளது.
திடீரென அவரது மனைவி நிர்வாணமாக அவருக்குப் பின்னால் தோன்றியபோது ஈஸ்டர்ன் கேப் (Eastern Cape) அமைப்பு உள்ளூர் மருத்துவர்களுடன் எவ்வாறு பணியாற்றுகிறது என்பதை என்டேவ் விளக்கிக் கொண்டிருந்தார் என்று டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.
வைரல் வீடியோவில், அக்குழுவின் தலைவர் பெயித் முத்தம்பி (Faith Muthambi) தலையிட்டு, “உங்களுக்குப் பின்னால் உள்ளவர் சரியாக ஆடை அணியவில்லை,” என்று என்டேவுவிடம் எச்சரிப்பதைக் காணலாம்.
“நீங்கள் ஒரு கூட்டத்தில் பங்கேற்கிறீர்கள் என்று அவர்களிடம் சொன்னீர்களா? இது மிகவும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது, நீங்கள் டிவியில் நேரலையில் இருக்கிறீர்கள்” என்று வீடியோவில் அவர் மேலும் கூறுகிறார்.
பின்னர் என்டேவு முகத்தை கைகளால் மூடிக் கொண்டே மன்னிப்பு கேட்பதை பின்னர் காணலாம்.
“நான் மிகவும் வருந்துகிறேன். நான் மீட்டிங்கில் ஈடுபாட்டுடன் கேமராவை பார்த்துக் கொண்டிருதேன்., எனக்கு பின்னால் என மனைவி வருவதை நான் பார்க்கவில்லை. எங்களுக்கு இந்த தொழில்நுட்பம் மிகவும் புதிது. எனது வீட்டில் தனியாக அலுவகத்திற்கு என அறை இல்லை. என மனைவி நான் கூட்டத்தில் பங்கேற்றுக் கொண்டிருப்பதை அறியாமல், என் மனைவி குளியலறையைப் பயன்படுத்த வந்தார், நான் இதற்காக மன்னிப்பு கேட்கிறேன். எனக்கு மிகவும் தர்ம சங்கடமாக உள்ளது “என்று அவர் கூறினார்.