அதிபரை கை குடுப்பது போல் வந்து கன்னத்தில் அறைந்த நபர்!

உலகம் சற்றுமுன்
imanuvel
imanuvel

பிரான்சில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் இமானுவேம் மக்ரோனை இளைஞர் ஒருவர் அறைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மக்ரோன் பிரான்ஸ் நாட்டு முக்கிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார்.

தென்கிழக்கு பிரான்சில் உள்ள டிரோம் பகுதிக்கு சென்ற அதிபர் இம்மானுவேல் கோவிட் -19 க்குப் பிறகு வாழ்க்கை எப்படி இயல்பு நிலைக்கு திரும்புகிறது என்பதை பற்றி அறிய மாணவர்களையும், உணவகங்கள் நடத்துபவர்களையும் சந்தித்து பேசினார்..

சுற்றுப்பயணத்தின் இரண்டாவது சுற்றாக தென்கிழக்கு பிரான்ஸ் பகுதியில் உள்ள டெய்ன் எர்மிடேஜ் என்ற கிராமத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அக்கிராமத்தி வந்திறங்கிய மக்ரோன் அங்குள்ள மக்களுக்கு கையசைத்து காட்டியதுடன் அவர்களுடன் கை குலுக்கியும் வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.

France
France

அப்போது கை கொடுத்த இளைஞர் ஒருவர் திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் மக்ரோனின் கன்னத்தில் பளார் என அறைந்தார்.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பாதுகாப்பு படையினர் இளைஞரை கைது செய்துள்ளனர். பொதுவெளியில் பிரதமர் தாக்கப்பட்ட சம்பவம் பிரான்சில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

அதிபரை கன்னத்தில் அறைந்த நபர், அதிபரின் கொள்கைகள் ஒழிக என்று கூச்சலிட்ட நபர் என 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்..

அவர்கள் இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக பிரான்சில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய மஞ்சள் ஜாக்கெட் குழுவினரை சேர்ந்தவரா அந்த இளைஞர் என்ற ரீதியிலும் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொதுவெளியில் அதிபர் இம்மானுவேல் மேக்ரூனை ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.