hrnce webstie
hrnce webstie

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நில உரிமை ஆவணங்கள் இன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரங்களை பொதுமக்கள் பார்த்துத் தெரிந்து கொண்டு, அவற்றை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து சரி பார்த்துக் கொள்ளலாம்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 36 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. அவற்றுக்கு சொந்தமாக 4 லட்சத்து 78 ஆயிரத்து 272 ஏக்கர் நிலங்கள் உள்ளன. அவற்றின் உரிமை ஆவணங்களை சரிபார்க்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தற்போது, கோயில் நிலங்களின் உரிமை ஆவணங்களை வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ‘தமிழ் நிலம்’ மென்பொருளோடு ஒப்பீடு செய்து முழுவதும் ஒத்துப்போகும் இனங்கள் பகுதி அளவு ஒத்துப்போகும் இனங்கள் மற்றும் புதிய இனங்கள் என பிரிக்கப்பட்டு உள்ளன.

hrce website
hrce website

அவற்றில் முதல் கட்டமாக 3 லட்சத்து 43 ஆயிரத்து 647 ஏக்கர் நிலங்கள் முழுவதும் ஒத்துப்போகும் இனங்களாக கண்டறியப்பட்டு அந்நிலங்களின் ‘அ’ பதிவேடு நகர நில அளவை பதிவேடு சிட்டா போன்றவை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் அறநிலையத்துறையின் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்து சமய அறநிலையத்துறையின் www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பொதுமக்கள் இந்த நிலங்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

இவ்வகையில் இன்று மொத்தமுள்ள கோயில் நிலங்களில் 72 சதவீத நிலங்கள் குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியிடப் பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending