December 7, 2025, 1:50 AM
25.6 C
Chennai

யூரோ 2021: அரையிறுதியில் பங்கு பெறும் அணிகள்!

euro cup 2021
euro cup 2021

யூரோ 2020 காலிறுதிப் போட்டிகள்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

அரையிறுதியில் பங்கு பெறும் அணிகள்

நேற்று ஜூலை 3ஆம் நாள் யூரோ 2020இல் இரண்டு அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன.
முதல் போட்டி செக் குடியரசுக்கும் டென்மார்க்குக்கும் இடையில் 2021 ஜூலை 3 ஆம் தேதி இந்திய நேரப்படி 21.30 மணிக்கு பாகு நகரின் ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் விளையாடப்பட்டது.
இரண்டாவது போட்டி உக்ரைனுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் 2021 ஜூலை 4 அன்று இந்திய நேரப்படி அதிகாலை 00.30 மணிக்கு ரோம் நகரின் ஸ்டேடியோ ஒலிம்பிகோவில் நடைபெற்றது
.

டென்மார்க் Vs செக் குடியரசு (டென்மார்க் வெற்றி, 2-1)

டென்மார்க் செக் குடியரசை எதிர்த்து 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. 1992இல் போட்டியை வென்ற பிறகு முதல் முறையாக டென்மார்க் இம்முறைதான் அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளது. தால் தாமஸ் டெலானி மற்றும் காஸ்பர் டோல்பெர்க் ஆகியோர் முதல் பாதியில் கோல் அடித்தனர்.

டென்மார்க் அணி தங்கள் வரலாற்றில் நான்காவது முறையாக அரையிறுதிக்கு வந்துள்ளது. மேலும் இறுதிப் போட்டியில் ஒரு இடத்திற்காக இங்கிலாந்தை வெம்ப்லியில் புதன்கிழமை எதிர்கொள்ளும். நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் அவர்களின் தொடக்கக் குழு நிலை ஆட்டத்தில் இருதய பாதிப்பிற்கு ஆளானதை அடுத்து இது அணிக்கு ஒரு உணர்ச்சிகரமான நேரம்.

பாட்ரிக் ஷிக் செக் குடியரசு அணிக்கு ஒரு கோல் அடித்தார். ஆனால் அந்த அணி ஒரு அற்புதமான ஆட்டத்திற்குப் பிறகு போட்டியில் இருந்து வெளியேறினர். ஜென்ஸ் ஸ்ட்ரைஜர் லார்சன் மூலையில் இருந்து அனுப்பிய பந்தை டெலானி தலையால் தட்டி ஐந்தாவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். 42ஆவது ந்மிடத்தில் காஸ்பர் இரண்டாவது கோலை அடித்தார்.

euro 2021
euro 2021

இங்கிலாந்து vs உக்ரைன்
(இங்கிலாந்து வெற்றி, 4-0)

1996ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்து முதல் முறை இந்த சாம்பியன்ஷிப் அரையிறுதிக்கு வந்துள்ளது. உக்ரைனை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது. ஹென்றி கேன் இரண்டு முறை கோல் அடித்தார். டென்மார்க்குடன் அரையிறுதி மோதலைஇங்கிலாந்து அணி சந்திக்கிறது. 2004ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு யூரோ போட்டியில் இங்கிலாந்து தனது முதல் கோலை முதல் நான்கு நிமிடத்திற்குள் போட்டுள்ளது, ஸ்டேடியோ ஒலிம்பிகோவில் இங்கிலாந்து கேப்டன் ரஹீம் ஸ்டெர்லிங் தந்த பந்து ஒன்றை கோலடித்து கணக்கைத் தொடங்கினார்.

இரண்டாவது பாதியில் 46ஆவது நிமிடம் ஹாரி மாகுவேர் ஒரு கோலடித்தார். உக்ரேனின் எதிர்ப்பு நொறுங்கியதால் கேன் விரைவில் தனது அணியின் மூன்றாவது கோலைப் போட்டார். அதன் பின்னர் 63ஆவது நிமிடத்தில் ஜோர்டான் ஹென்டர்சன் தனது முதல் சர்வதேச கோலைப் போட்டு இங்கிலாந்தை வசதியாக அரையிறுதிக்கு அனுப்பினார்.

பாக்குவில் டேன்ஸ் செக் குடியரசை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதால் அரையிறுதிப் போட்டியில் கரேத் சவுத்கேட்டின் அணி டென்மார்க்கை புதன்கிழமை வெம்ப்லியில் எதிர்கொள்ளும்.

இனி அரையிறுதி ஆட்டங்கள்

முதல் அரையிறுதி ஆட்டம் ஜூலை 7ஆம் நாள் இந்திய நேரப்படி அதிகாலை 0030 மணிக்கு லண்டனின் வெம்ப்லியில் இத்தாலி மற்றும் ஸ்பெயினுக்கு இடையே நடைபெறும்,
இரண்டாவது அரையிறுதி இங்கிலாந்து மற்றும் டென்மார்க் இடையே ஜூலை 8ஆம் நாள் இந்திய நேரப்படி அதிகாலை 0030 மணிக்கு அதே லண்டனின் வெம்ப்லி மைதானத்தில் நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories