
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டி-முதல்நாள்
இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று (12.08.2021) லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக ஆட்டம் சற்று தாமதமாகத் தொடங்கியது. ஆனால் ஒரு நாளில் போடப்படவேண்டிய 90 ஓவர்களும் போடப்பட்டன.
டாஸில் வென்ற இங்கிலாந்து அணி இந்தியாவை பேட்டிங் செய்யச் சொன்னது. ஆட்ட நேர முடிவில் இந்தியா மூன்று விக்கட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 83 ரன், கே.எல். ராகுல் 127 (ஆடிக்கொண்டிருக்கிறார்), புஜாரா 9, விராட் 42, ரஹானே 1 (ஆடிக்கொண்டிருக்கிறார்) ரன்கள் எடுத்துள்ளனர்.
டெஸ்ட் போட்டியில் ஒரு நாளில் 276 ரன் எடுப்பது என்பது ஒரு நல்ல ஸ்கோர்தான். ஒரே நாளில் 500 ரன்கள் எடுத்த டெஸ்ட் போட்டிகளெல்லாம் உண்டு. இருந்தாலும் 276 ஒரு நல்ல ஸ்கோர். இந்திய பேட்ஸ்மென்களில் ரோஹித், ராகுல், புஜாரா, விராட், ரஹானே ஆகியோர் 50 ஓவர்கள் விளையாடி குறைந்த பட்சம் 50 ரன்கள் அடித்தால் இந்திய அணி கேமை கண்ட்ரோல் செய்யலாம். அந்த வகையில் ரோஹித், ராகுல் நேற்று நன்றாக விளையாடினார்கள். புஜாரா சரியாக விளையாடவில்லை. விராட்டும் நன்றாக விளையாடினார். ரஹானே இன்று எப்படி விளையாடுகிறார் எனப் பார்க்க வேண்டும்.
லார்ட்ஸ் மைதானத்தில் நூறு அடிப்பது என்பது ஒரு சாதனை. இதுவரை அந்தச் சாதனையைச் செய்த வீரர்கள் ...
வினு மன் காட் 184 1952இல்,
திலிப் வெங்சர்க்கார் – மூன்று முறை நூறு அடித்துள்ளார் – 1979, 1982, 1986
சௌரவ் கங்குலி 131 1996இல்
அசாருதீன் 121, 1990இல்
குண்டப்பா விஸ்வநாத் 113, 1979இல் – வெங்சார்க்கரும் இவரும் ஒரே டெஸ்டில் நூறு அடித்தனர்
ரவி சாஸ்திரி – 100, 1990இல்
அஜீத் அகர்கர் – 109, 2012இல்
அஜிங்க்யா ரஹானே – 103, 2014இல்
ராகுல் டிராவிட் – 103, 2011இல்
கே.எல். ராகுல் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.