
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனியார் விளம்பர படப்பிடிப்புக்காக சென்னை வருகை தந்திருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக விமானம் வாயிலாக தோனி வந்திருந்தார்.
நடிகர் விஜய் நடித்து வரும் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய் இருக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு படப்பிடிப்பும் சென்னையில் உள்ள தனியார் படப்பிடிப்பு மையத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று தோனியும் – நடிகர் விஜயும் நேரில் சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடங்கள் வரை இருவரும் சந்தித்து பேசிக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.