டி20: ஆப்கன் பெற்ற அபார வெற்றி!

உலகம் விளையாட்டு
icc t20 world cup
icc t20 world cup

ஐ,சி.சி டி20 உலகக் கோப்பை போட்டிகள் – 25.10.2021

-முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்-

ஆஃப்கானிஸ்தான் அணிக்கும் ஸ்காட்லாந்து அணிக்கும் திங்களன்று நடந்த ஆட்டம் ஒருதலைப் பட்சமான ஆட்டமாகிவிட்டது. ஆஃப்கான் அணி முதலில் ஆடி இருபது ஓவரில் 4 விக்கட் இழப்பிற்கு 190 ரன் எடுத்தது.

அதன் பின்னர் ஆடிய ஸ்காட்லாந்து அணி 10.2 ஓவரில் 60 ரன்னுக்கு ஆட்டமிழந்து தோல்வியைத் தழுவியது. பூவா தலையா வென்ற ஆஃப்கன் அணி மட்டையாடத் தீர்மானித்தது. முதல் 5.1 ஓவரில் அந்த அணி 50 ரன்கள் அடித்தது.

தொடக்க ஆட்டக்காரர் ஹசரத்துல்லா 30 பந்துகளில் மூன்று சிக்ஸ், மூன்று ஃபோருடன் 44 ரன் அடித்தார். முஜம்மது ஷாசாத் (22), ரஹ்மானுல்லா (46), நஜீபுல்லா (59) அடித்தனர். ரன்ரேட் 9.5. ஒரு இமாலய இலக்குடன் ஆடத்தொடங்கிய ஸ்காட்லாந்து அணி முஜிபுர் ரஹ்மான், ரஷித்கான் சுழலில் சிக்கி 10.2 ஓவரில் 60 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.

முஜிபுர் 20 ரன்னுக்கு 5 விக்கட், ரஷித் 9 ரன்னுக்கு 4 விக்கட். 130 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆஃப்கன் அணி 2 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. குரூப் 2வில் பகிஸ்தானும் ஆஃப்கனும் தலா இரண்டு புள்ளிகள் பெற்றுள்ளன.

ஆனால் ஆஃப்கன் அணியின் நெட் ரன்ரேட் +6.5. இதை நினைத்து மற்ற அணிகள், குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து அனிகள் கொஞ்சம் பதற்றமடையும் என்பதில் சந்தேகமில்லை.

நாளை இரண்டு ஆட்டங்கள் (1) தெனாப்ரிக்கா-மேற்கிந்தியத் தீவுகள் (குரூப்-1) (2) நியூசிலாந்து-பாகிஸ்தான் (குரூப்-2)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.