
பிரெட் – காராமணி பாக்ஸ்
தேவையானவை:
கோதுமை பிரெட் துண்டுகள் – 8, தேங்காய்த் துருவல் – 4 டீஸ்பூன்,
எள் – ஒரு டீஸ்பூன்,
சிவப்பு காராமணி – கால் கப்,
எண்ணெய் – தேவையான அளவு,
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு,
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்.
செய்முறை:
தேங்காய்த் துருவலுடன் எள் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். காரமணியை வேகவைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி – பூண்டு விழுது, அரைத்த எள் சேர்த்து வதக்கவும். பிறகு, வேகவைத்த காராமணியை சேர்த்து வதக்கி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கிளறினால் பூரணம் ரெடி. கோதுமை பிரெட்டின் ஓரங்களை நறுக்கிவிட்டு தண்ணீரில் பிரெட்டை நனைத்து எடுத்து பிழிந்து கிண்ணம் போல செய்து வைத்துக்கொள்ளவும். காராமணி மசாலாவை பிரெட் கிண்ணத்துக்குள் வைத்து ஆவியில் வேகவிட்டும் எடுக்கலாம். அல்லது சூடான எண்ணெயில் பொரித்தும் சாப்பிடலாம்.
குறிப்பு: காராமணிக்குப் பதில் பச்சைப்பயறு, ராஜ்மா, சோயா போன்ற தானியங்கள் சேர்க்கலாம். அவற்றை நன்றாக ஊறவைத்து பிறகு வேகவைத்து உபயோகிக்கவும்.



